
இவர் நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் என்ற பன்முகத் தன்மை கொண்டவர். இவர் கன்னட திரையுலகில் புகழ்பெற்றவராக உள்ளார். இவர் கன்னட நடிகரான ராஜ்குமாரின் முதல் மகன். 1986ல் சிவ ராஜ்குமார் தன்னுடைய திரைப்பட வாழ்க்கையை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளிவந்த ஆனந்த் திரைப்படத்தின் மூலம் தொடங்கினார். இந்திய திரையுலகில் நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு.

தொடர்ந்து பல வருடங்களாக ஏன் இன்றும் கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் பட்டத்தை தன் வசபடுத்தி வைத்து உள்ள பெருமை இவரை சாரும் இவர் நடித்த அனேக படங்கள் வெள்ளிவிழாவை கொண்டாடி இருக்கிறது தன் அப்பா நடிகர் ராஜ்குமார் போலவே கன்னட உலகில் நல்ல பெயரை சம்பாதித்தவர் .
