
பிரபல கர்நாடக இசைக் கலைஞர் எம்.எல்.வசந்தகுமாரி, விகடம் கிருஷ்ணமூர்த்தி தம்பதியின் மகள் ஸ்ரீவித்யா.தாயைப் போலவே நல்ல குரல் வளம் கொண்டவரான ஸ்ரீவித்யா நடனத்திலும் சிறந்து விளங்கினார்.
தனது 13வது வயதில் நடிப்புக் களத்தில் இறங்கினார் ஸ்ரீவித்யா. சிவாஜி கணேசன் நடித்த திருவருட்செல்வர்படத்தில் நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர் தொடர்ந்து நிறையப் படங்களில் நடிக்கஆரம்பித்தார் ஸ்ரீவித்யா.
சிவாஜி, ரஜினி, கமல், ஜெய்சங்கர், விஜயக்குமார் உள்ளிட்ட அப்போதைய முன்னணி ஹீரோக்களுடன்ஜோடியாக நடித்துள்ளார் ஸ்ரீவித்யா. ரஜினியின் முதல் ஹீரோயின் ஸ்ரீவித்யா என்பது குறிப்பிடத்தக்கது. அபூர்வராகங்கள் படத்தில் ரஜினியின் மனைவியாக ஸ்ரீவித்யா வருவார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 900க்கும் மேற்பட்டபடங்களில் நடித்துள்ளார் ஸ்ரீவித்யா.
இதில் அவரது தாய் மொழியான மலையாளத்தில் மட்டும் 200 படங்களில்நடித்துள்ளார். ஸ்ரீவித்யா நடித்ததில் புகழ் பெற்றவை: அபூர்வ ராகங்கள், சொல்லத்தான் நினைக்கிறேன், இமயம், புன்னகைமன்னன், அபூர்வ சகோதரர்கள், தளபதி, காதலுக்கு மரியாதை, நம்மவர் என பல படங்கள். கணவர் ஜார்ஜிடம் இருந்து விவாகரத்து பெற்ற ஸ்ரீவித்யா சில காலத்திற்கு முன் நடிப்பதைக் குறைத்துக்கொண்டார்.
சென்னையிலிருந்து கேரளாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்கு டிவி தொடர் ஒன்றில் நடித்து வந்தார்.ஆனால் திடீரென அதிலிருந்து விலகிக் கொண்டார்.
அதன் பிறகு அவர் குறித்த எந்தத் தகவலும்வெளியாகவில்லை. இந் நிலையில் ஸ்ரீவித்யாவுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் அவர் திருவனந்தபுரத்தில்உள்ள அம்ரிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகின.
நோய் முற்றிய நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், ஸ்ரீவித்யாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மரணமடைந்தார்.
மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஜார்ஜை காதலித்து திருமணம் செய்தார். ஆனால்அந்த திருமண வாழ்க்கை நீண்ட காலம் நிலைக்கவில்லை. இருவரும் விவாகரத்து செய்தனர். அதன் பின்னர்தனியாக வசித்து வந்தார் ஸ்ரீவித்யா.
இவர் நடித்த திரைப்படங்கள்
அபூர்வ ராகங்கள், கண்ணெதிரே தோன்றினாள், காதலுக்கு மரியாதை, நம்பிக்கை நட்சத்திரம், ஆசை 60 நாள், ஆறு புஷ்பங்கள், துர்க்கா தேவி, ரௌடி ராக்கம்மா, இளையராணி ராஜலட்சுமி, அன்புள்ள மலரே, எழுதாத சட்டங்கள், இவர்கள், வித்தியாசமானவர்கள், நன்றிக்கரங்கள், சித்திரச்செவ்வானம், இமயம், கடமை நெஞ்சம், சிசுபாலன், டில்லி டு மெட்ராஸ், உறவுகள் என்றும், வாழ்க, தங்க ரங்கன், திருக்கல்யாணம், ராதைக்கேற்ற கண்ணன், தளபதி
