Wednesday, October 28
Shadow

திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் சீயான் விக்ரம் வெளியிட்ட இரங்கல் செய்தி

நடிகர் சீயான் விக்ரம் இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில், தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் என பன்முக ஆளுமைக் கொண்ட டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்சிச்யும், துயரமும் அடைந்தேன். தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கிறேன். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.