Wednesday, October 28
Shadow

பிரபல் ஹிந்தி நடிகர் சம்மி கபூர் மறைந்த தினம் இவரைப்பற்றிய சில வரிகள்

பஞ்சாபியரும் திரைப்பட மற்றும் நாடக நடிகருமான பிரித்விராஜ் கபூருக்கு மும்பையில் பிறந்தார். பிரித்விராஜ் கபூரின் மூன்று மகன்களில் இரண்டாவதாகப் பிறந்த சம்மிக்கு பெற்றோர் இட்ட பெயர் சம்சேர் ராஜ் கபூர் என்பதாகும். மற்ற இரு மகன்களான, ராஜ் கபூரும் சசி கபூரும் இவரைப்போலவே தந்தையின் வழியில் இந்தித் திரைப்பட உலகில் புகழ் பெற்று விளங்கினர். மும்பையில் பிறந்தாலும் இளமைக் காலத்தை கொல்கத்தாவில் வளர்ந்தார். பின்னர் மும்பையின் வடாலாவில் உள்ள புனித யோசஃப் கான்வென்டிலும் மாதுங்காவில் உள்ள டான் பாசுகோ உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். பள்ளியிறுதியை நியூ எரா பள்ளியில் முடித்தார்.

புகழ்பெற்ற நடிகை கீதா பாலியை மணம் புரிந்திருந்தார். அவரது மரணத்திற்குப் பிறகு நீலா என்பவரை திருமணம் செய்துள்ளார். இணையத்தில் மிகுந்த ஆர்வமுள்ள இவர் மும்பை இணையப் பயனாளர் சங்கத்தின் தலைவராக இருந்துள்ளார்.

நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பால் துன்பமுற்ற கபூர் ஆகஸ்ட் 07, 2011 அன்று மும்பையின் பிரீச் கேன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது நிலை அடுத்த சில நாட்களுக்கு மோசமாகவே இருந்தநிலையில் செயற்கை மூச்சு விடும் இயந்திர வழியே கண்காணிக்கப்பட்டு வந்தார். ஆகஸ்ட் 14, 2011 அன்று காலை 05:15 மணிக்கு அன்னாரின் உயிர் பிரிந்தது.