
உலகத்திலே முதலில் தோன்றியது திருடன் இரண்டாவது தான் போலீஸ் என்ற தத்துவத்துடன் ஆரம்பிக்கும் படம் தான் படம் படத்தின் தத்துவத்துக்கு ஏற்ப தான் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன கதையும் அமைத்து இருக்கிறார் இயக்குனர் ராஹேஷ் . படத்துக்கு மிக பெரிய பலம் திரைகதை தான் அந்த அளவுக்கு வேகம் அதை விட சராசரி மக்களை மிகவும் யோசிக்க வைக்கும் படம் முக்கியமாக பெண்களுக்கான ஒரு பாடம் என்று கூட சொல்லலாம்.
மற்றவர்களை விட இயக்குனர் ராஹேஷ் தன் கதையும் திரைக்கதையை அதிகம் நம்பி எடுத்துள்ளார். இப்படியான ஒரு கதையை எடுத்த இந்த இயக்குனரை கண்டிப்பாக பாரட்டவேன்டியே ஆகணும்.சமுக அக்கறை கலந்தகதைகள் வருவது சினிமாவுக்கு மிக ஆரோக்கியமான விஷயம்.
படத்தின் கதையை சொன்னால் அது படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு சுவாரிசம் கொஞ்சம் குறையும் ஆகவே ஒரு லைன் கதையாக சொல்லவேண்டும் என்றால் திருடன் செய்கிறார்களா இல்லை போலீஸ் செய்கிறார்களா என்பது தான் கதை படத்தின் கிளைமாக்ஸ் தமிழ் சினிமாவுக்கு சாத்தியமா என்று யோசிக்க வைக்கும் ஆனால் இயக்குனரின் தைரியம் பாராட்ட வேண்டும் இந்த கிளைமாக்ஸ் நம்ம போலீஸ் அதிகாரிகளுக்கு கிடைத்தால் நிச்சயம் பல குட்டரங்கள் குறையும் குறிப்பா பெண்களுக்கான மிக பெரிய ஒரு பாதுகாப்பு கிடக்கும்
சரி படத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களை பார்ப்போம் துருவா நாயகனாக நாயகியாக ஐஸ்வர்யா தத்தா, சரண்யா பொன்வண்ணன், மைம்கோபி, சக்ரவர்த்தி, ராதாரவி,நாகி நெடுர், அருள்தாஸ்,அஞ்சனா,மனோபாலா,ரவி ராஜா,மற்றும்ப்பாளர் நடிப்பில் அச்சு இசையில் P.G.முத்தையா ஒளிப்பதிவில் ராஹேஷ் இயக்கத்தில் வெளிவந்து இறுகும்படம் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன
படத்தின் நாகன் துருவா தனக்கு கொடுத்து இருக்கும் பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார் என்று சொல்லவேண்டும் நாளுக்கு நாள் துருவா நடிப்பில் முனேற்றம் மிக அருமையாக தெரிகிறது இந்த முறை நடத்திலும் ஒரு கை பார்த்து இருக்கிறார் அதேபோல அஞ்சனவுடன் காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்து இருக்கிறார்
படத்துக்கு மிக பெரிய பிளஸ் என்று சொன்னால் அது குறைந்த நேரம் நிறைவாரக நம் மனதில் நிற்கும் அஞ்சனா மிகவும் எதார்த்தமாக நடித்து இருக்கிறார் சில காட்சிகளில் அவரை பார்க்கும்போது நமக்கு இப்படி ஒரு மனைவி கிடைக்கமாட்டளா என்ற ஏக்கம் வரும் அளவுகு அழ்கும்சரி நடிப்பும் சரி அருமையாக வெளிபடுத்தியுள்ளார்.
படத்துக்கு நல்ல நாயகியை தேர்ந்த்டுத்து இருக்கலாம் ஐஸ்வர்யா தத்தா படத்துக்கு மிக பெரிய மைனஸ் என்று தான்சொல்லனும் எல்லா கதாபாத்திரத்தை மிக சிறப்பாக தேர்ந்தெடுத்த இயக்குனர் நாயகி விஷயத்தில் மட்டும் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்லணும் . வேறு நயாகியாக இருந்திருந்தால் இந்தபடத்துக்கும் சரிகதைக்கும்சரி கொஞ்சம் பலமாக இருந்து இருக்கும் கிளைமாக்ஸ் காட்சியில் இவர் துப்பாக்கி எடுத்து சுடும்போது ஐயோ என்று சொல்லுமளவுக்கு இருக்கிறார்.
சரண்யா பொன்வண்ணன், ராதாரவி, மனோபாலா இவர்கள் எல்லோரும்சிருது நேரம் வந்தாலும் அவர்களின்பங்கை சிறப்பாக கொடுத்து இருகிறார்கள்.
படத்தின் அடுத்த பலம் மைம்கோபி மற்றும் அருள் தாஸ் எப்பவும் போல சிறந்த வில்லன்கள் படம் இவர்களை சுற்றிதான் அதை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள் அதே போல J.D.சக்கரவர்த்தி இன்ஸ்பெக்டரராக நடித்து இருக்க்றார் அருமையான நடிப்பு எப்போதும் வில்லனாக வரும் இவர் இந்த முறை மிக சிறந்த கதாபாத்திரம் அதற்கு ஏற்ப மேக்கப் கெட்டப் இயக்குனரை பாராட்டலாம்.
மொத்தத்தில் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் பெண்களுக்கான பாடம் Rank 3.5/5
