மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன – திரைவிமர்சனம் (சபாஷ்) Rank 3.5/5
உலகத்திலே முதலில் தோன்றியது திருடன் இரண்டாவது தான் போலீஸ் என்ற தத்துவத்துடன் ஆரம்பிக்கும் படம் தான் படம் படத்தின் தத்துவத்துக்கு ஏற்ப தான் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன கதையும் அமைத்து இருக்கிறார் இயக்குனர் ராஹேஷ் . படத்துக்கு மிக பெரிய பலம் திரைகதை தான் அந்த அளவுக்கு வேகம் அதை விட சராசரி மக்களை மிகவும் யோசிக்க வைக்கும் படம் முக்கியமாக பெண்களுக்கான ஒரு பாடம் என்று கூட சொல்லலாம்.
மற்றவர்களை விட இயக்குனர் ராஹேஷ் தன் கதையும் திரைக்கதையை அதிகம் நம்பி எடுத்துள்ளார். இப்படியான ஒரு கதையை எடுத்த இந்த இயக்குனரை கண்டிப்பாக பாரட்டவேன்டியே ஆகணும்.சமுக அக்கறை கலந்தகதைகள் வருவது சினிமாவுக்கு மிக ஆரோக்கியமான விஷயம்.
படத்தின் கதையை சொன்னால் அது படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கு சுவாரிசம் கொஞ்சம் குறையும் ஆகவே ஒரு லைன் கதையாக சொல்லவேண்டும் என்றால் திருடன் செய்கிறார்களா இல்லை போலீஸ் செய்கிறார்...




