Tuesday, April 28
Shadow

இசையமைப்பாளர் எஸ். ஏ. ராஜ்குமார் பிறந்த தினம்

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி ஆகிய பல தென்னிந்தியத் திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.

செ. ஏ. ராஜ்குமார் அவர்கள் தமிழ்நாட்டின் சென்னையைச் சேர்ந்த செல்வராஜன் மற்றும் கண்ணம்மாள் அவர்களுக்கு ஆகஸ்ட் 23, 1964 ஆம் ஆண்டு மகனாகப் பிறந்தார். இவரது குடும்ப முன்னோர்கள் திருநெல்வேலி மாவட்டம், பேட்டையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவரது தந்தை ஒரு மேடைப் பாடகர் ஆவர். இளையராஜா, கங்கை அமரன், தேவா போன்ற பிரபல இசையமைப்பாளர்கள் நடத்திய மேடை நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். ராஜ்குமாருக்கு தனது தந்தையின் இசை வாழ்க்கையில் ஆர்வம் ஏற்பட்டது. ராஜ்குமார் சுப்பையா பாகவதரின் வழிகாட்டலின் கீழ் பாரம்பரிய இசையை முறையாக மூன்று ஆண்டுகள் பயிற்சி மேற்கொண்டார்.

இவர் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
குபேரன், ஜேம்ஸ் பாண்டு, உன்னை கொடு என்னை தருவேன், மாயி, என்னவளே, வானத்தைப் போல, பிரியமானவளே, பெண்ணின் மனதைத் தொட்டு, ராஜகாளியம்மன், பட்ஜெட் பத்மநாபன், பாளையத்து அம்மன், வண்ணத் தமிழ்ப்பாட்டு, கந்தா கடம்பா கதிர்வேலா, சுதந்திரம், ஆனந்தம், பிரியாத வரம் வேண்டும், நாகேஷ்வரி, விஸ்வனாதன் ராமமூர்த்தி, புன்னகை தேசம், காமராசு, நம்ம வீட்டு கல்யாணம், பந்தா, ராசா, திவான், ஆளுக்கொரு ஆசை, வசீகரா, பிரியமான தோழி, காதலுடன், மானஸ்தன், கண்ணாடிப் பூக்கள், கண்ணம்மா, வள்ளுவன் வாசுகி, சொக்காலி, சின்னப்பூவே மெல்லப்பேசு, தங்கச்சி, வீரன் வேலுத்தம்பி, இரயிலுக்கு நேரமாச்சு, மனசுக்குள் மத்தாப்பூ, பறவைகள் பலவிதம், குங்குமக் கோடு, என் தங்கை, புது வசந்தம், தங்கத்தின் தங்கம், புது புது ராகங்கள், பெரும் புள்ளி, பூவே உனக்காக, கிருஷ்ணா, சூரிய வம்சம், புத்தம் புது பூவே, பிஸ்தா, அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், பொன்மனம், மறுமலர்ச்சி, சிம்மராசி, நீ வருவாய் என, துள்ளாத மனமும் துள்ளும், பாட்டாளி, திருப்பதி ஏழுமலை வெங்கடேசா, சுயம்வரம், கண்ணுபடப்போகுதைய்யா. சூரிய பார்வை, மலபார் போலீஸ்