
சிம்பு நடித்த ‘வாலு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய் சந்தார். இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக ஹன்சிகா நடித்தார். சந்தானம், விடிவி கணேஷ் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். 2015-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது.
இதைத் தொடர்ந்து ‘ஸ்கெட்ச்’ படத்தை இயக்கினார் விஜய் சந்தர். இந்தப் படத்தில் விக்ரம், தமன்னா இருவரும் ஜோடியாக நடித்தனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்தப் படம், இந்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு ரிலீஸானது.
இந்நிலையில், அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார் விஜய் சந்தர். இந்தப் படத்தை விஜய வாகிணி ஸ்டுடியோ தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.
விஜய் சேதுபதி நடிப்பில் ‘சீதக்காதி’, ‘செக்கச்சிவந்த வானம்’, ‘96’, ‘சூப்பர் டீலக்ஸ்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குத் தயாராக உள்ளன. இதுதவிர, ‘சை ரா நரசிம்ம ரெட்டி’ என்ற தெலுங்குப் படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.
