
பிக் பாஸ் 2 இறுதி கட்டத்தை தொடுகிறது வெற்றியாருக்கு என்ற கட்டத்தில் உள்ளது பிக் பாஸ் கடந்த முறை போல மிக பெரிய வெற்றியை இந்த சீசன் கொடுக்கவில்லை அனால் வெற்றிகரமாக ஒரு வழியாக முடிந்தது
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சி ஜுன் மாதம் 17ம் தேதி ஆரம்பமானது. யாஷிகா ஆனந்த், பொன்னம்பலம், மகத், டானியல், வைஷ்ணவி, ஜன்னி, அனந்த் வைத்தியநாதன், ரம்யா, சென்றாயன், ரித்விகா, மும்தாஜ், பாலாஜி, மமதி, நித்யா, ஷாரிக், ஐஸ்வர்யா தத்தா ஆகிய 16 பேர் முதல் நாளிலிருந்து போட்டியாளர்களாகப் பங்கேற்றார்கள். வைல்டு கார்டு நுழைவாக விஜயலட்சுமி நுழைந்தார்.
100 நாட்கள் ஒரே வீட்டில் என்பது 105 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவர் வெளியேறியுள்ள நிலையில் தற்போது, ஐஸ்வர்யா, பாலாஜி, ஜனனி, ரித்விகா, விஜயலட்சுமி, யாஷிகா ஆகியோர் மட்டுமே உள்ளனர். ஜனனி இறுதிப் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுவிட்டதால் மற்றவர்களில் யார் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறப் போகிறார்கள் என்பது இனி வரும் நாட்களில் தெரிந்துவிடும்.
இந்த சீசனில் வைல்டு கார்டு நுழைவு என்பது விஜயலட்சுமி ஒருவருடன் நின்றுவிட்டது. கடந்த முதல் சீசனில் பிந்து மாதவி, ஹரிஷ் கல்யாண், சுஜா, காஜல் பசுபதி ஆகிய நால்வர் வைல்டு கார்டு மூலம் நுழைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது சீசனில் அது ஒருவரோடு நின்றுவிட்டது.
முதல் சீசனைப் போல இரண்டாவது சீசன் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இல்லை என்ற விமர்சனம் எழுந்தாலும் இன்று 93வது நாளை எட்டியுள்ள நிகழ்ச்சி. கடைசி கட்ட பரபரப்பில் நுழைந்துள்ள இந்த ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி செப்டம்பர் 30ம் தேதி நடைபெற உள்ளது
