
ரசிகர்களால் மிகவும் எதிர்ப்பார்க்கும் படம் சர்கார் இந்த படம் வரும் தீபாவளிக்கு வையாகயுள்ளது இது நாம் அறிந்த விஷயமே தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. எனவே படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவு பகலாக படு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தன்னுடைய உதவி இயக்குநர்களுக்கு ஆளுக்கு ஒரு பொறுப்பை கொடுத்து அவர்களை பம்பரமாக சுற்றுவிட்டு வேலை வாங்கி வருகிறாராம் முருகதாஸ்.
இதற்கிடையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கும் சர்கார் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவை வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.
இந்த விழாவில் ரஜினி தான் சிறப்பு விருந்தினர். இதற்கான வேலைகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இன்னொரு பக்கம், சர்கார் படத்தை தயாரித்து வரும் ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் ‘சர்கார்’ கொண்டாட்டம் என்றும் வருகிற 19-ஆம் தேதி ‘சர்காரி’ன் முதல் அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு படத்தின் டீஸர் வெளியீட்டு குறித்த அறிவிப்பாகவோ அல்லது படத்தின் வியாபாரம் மற்றும் விநியோகம் குறித்த அறிவிப்பாகவோ இருக்கலாம் என்ற ஹேஸ்யங்கள் நிலவி வருகின்றன. ஆனால் விஜய் ரசிகர்கள் பங்கு கொள்கிற வகையில் ‘சர்கார்’ குறித்த போட்டி அறிவிப்பு என்ற தகவல் அடிபடுகிறது.
