
நடிகர் விக்ரம் மிகவும் சிறந்த மனிதர் மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதில் மிகவும் கவனம் எடுத்து கொள்வார் எல்லோரிடமும் மிகவும் சகஜமாக பழகும் நபர் அதுவும் பத்திரிக்கையாளர்கள் கிட்ட மிகவும் அன்பாக இருப்பார்.
பாலா இயக்கும் வர்மா படத்தின் மூலம் நடிகர் விக்ரம் உடைய மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்பது பலருக்கும் தெரிந்த தகவல்தான். தெலுங்கில் வெற்றியடைந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீ-மேக்கான இந்த படத்தின் டீஸர் வெளியீடு என்ற பெயரில் துருவை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சேது படத்தில் விக்ரம் நடித்தபோது துருவுக்கு 6 வயது! துருவ் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பான். இப்போது அவனை என் படத்தில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. படப்பிடிப்பில் துருவ் என்னை அதிகம் கஷ்டப்படுத்தவில்லை. நான் சொல்வதை புரிந்துகொண்டு நான் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்து கொடுப்பான். என்றார்,
தொடர்ந்து பேசிய விக்ரமுக்கு மீடியாக்கள் மீது என்ன கோபமோ தெரியவில்லை.“எனக்கு நண்பர்களாக இருந்த பத்திரிகையாளர்கள் இப்போது துரோகியாகிவிட்டார்கள்” தற்போது, அவர்கள் எல்லாம் துருவுக்கு ரசிகர்களாகிவிட்டார்கள்” என்றார்.
