Wednesday, October 28
Shadow

தில்லாக விஜயின் சர்காருடன் மோதும் திமிருபிடிச்சவன் விஜய் ஆண்டனி

திமிராக தில்லாக தைரியமாக தீபாவளிக்கு விஜய்யின் சர்காருடன் மோதபோகும் திமிருபிடிச்சவன் யாருன்னு பாக்குறிங்களா எல்லாம் நம்ம விஜய் ஆண்டனி தான் காரணம் படம் அந்த அளவுக்கு வித்தியாசமாகவும் பிரமாண்டமாகவும் வந்து இருக்கும் தைரியம் தான் என்று செய்திகள் கசிந்துள்ளது .

காளி படத்தை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் படம் திமிரு புடிச்சவன். நிவேதா பெத்ராஜ் ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் ஆண்டனி போலீசாக நடிக்கிறார். கணேசா இயக்குகிறார்.

விஜய் ஆண்டனியே இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி நவ., 6-ம் தேதி தீபாவளி தினத்தில் படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர்.

அன்றைய தினம் தான் விஜய் நடித்த சர்கார் படமும் ரிலீஸாகிறது.