Wednesday, October 28
Shadow

எழுமின் – திரைவிமர்சனம் (அவசியம் பார்க்கவும்) Rank 3/5

சமீபகாலமாக தமிழ் சினிமாவுக்கு ஒரு பொற்காலம் என்று போன வாரம் சொன்னேன் அது இந்த வாரமும் தொடர்கிறது என்று சொன்னால் மிகையாகது என்று தான் சொல்லணும் ஆம் மிக சிறந்த கருத்தோடு அதோடு நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் வெளிவந்து இருக்கும் படம் எழுமின் என்று சொன்னால் மிகையாகது ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னம்பிக்கையும் தற்காப்பும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற கருத்தை வெளிபடுத்தும் படம் தான் எழுமின்

இன்றைய காலத்திற்கு ஏற்ப படம் அது மட்டும் இல்லை இன்று மக்களின் அவசியத்தையும் சொல்லி இருக்கும் படம் என்று சொன்னால் மிகையாகது இந்த படத்தை இயக்கிய இயக்குனருக்கும் சரி படத்தை தயாரித்த தயாரிப்பளருக்கும் இரு கரம் கூப்பி நன்றிகள் சொல்ல நாம் அனைவரும் கடமை பட்டு இருக்கிறோம் என்று தான் சொல்லணும் இந்த கருத்து வர்த்தக ரீதியாக எப்படி சாத்தியம் ஆகும் என்று தெரியவில்லை அதை பற்றி கவலை படமால் என் நாடு என் பிள்ளைகள் அவர்கள் இப்படி இருக்கவேண்டும் என்ற கருத்துடன் சொல்லி இருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்

இந்த படத்தில் விவேக்,தேவயாணி, பிரேம்குமார்,அழகம்பெருமாள்,ரிஷி,செல்முருகன்,இவர்களுடன் நம்பிக்கை நட்சத்திரங்கள் நாளைய வரலாறுகள் என்று சொல்ல கூடிய குழந்தை நட்சத்திரங்கள் பிரவீன்,ஸ்ரீஜித்,வினித்,சுகேஷ்,கிருத்திகா,தீபிகா மற்றும் பலர் நடிப்பில் கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் கணேஷ் சந்திரசேகரன் இசையில் விஜி இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் எழுமின்

இன்றைய விளையாட்டு துறையில் நடக்கும் அசிங்கத்தையும் அதனுடன் நம் குழந்தைகளுக்கு தற்காப்பும் முக்கியம் என்பதை உணர்த்தும் கதை கருவுடன் வந்து இருக்கும் படம்

ஒரு காலத்தில் நாம் பிள்ளைகளுக்கு ‘குட் ஹேபிட்’, ‘பேட் ஹேபிட்’ பற்றி பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்த காலம் மலையேறிப் போய் ‘குட் டச்’, ‘பேட் டச்’ பற்றி சொல்லிக் கொடுக்கும் அளவுக்கு வந்திருக்கிறது நம் நாட்டின் நிலைமை!எந்தப் பக்கம் திரும்பினாலும் நம்முடைய உயிருக்கு ஏதோவொரு விதத்தில் அச்சுறுத்தல்… குழந்தைகளைக் குறிவைத்துக் குதறுகிற காமப் பிசாசுகள்… நம்மைச் சுற்றிச் சூழ்ந்திருக்கிற கழிசடைகளைக் களையெடுப்பது ஒரேநாளில் நடக்காது. அவர்களிடமிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள தற்காப்புக் கலைகள் கை கொடுக்கும். அதை குழந்தைப் பருவத்திலிருந்தே நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.

விவேக் மிக பெரிய தொழில் அதிபர் அனால் மனிதநேயம் மிக்க ஒரு மனிதர் தன பிள்ளைகளுடன் படிக்கும் பயிற்சி பெரும் ஏழை மாணவர்களையும் தன் குழந்தைகளாக பராமரிக்கிறார் இதில் விவேக் மகன் குத்துசண்டை வீரர் அதுபோல ஒவ்வொரு மாணவர்களும் ஒவ்வொரு துறையில் பயிற்சி பெறுவார்கள் ஒரு கட்டத்தில் விவேக் மகனின் நண்பர்களான சகமாணவர்கள் விளையாட்டு பயிற்சி மையத்துக்கு கட்டணம் கட்ட முடியாமல் போகிறது அதோடு அதே நேரத்தில் அந்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தேர்வாகி இருப்பார்கள். இந்த சுழ்மிலையில் மாநில குத்துசண்டை போட்டியில் விவேக் மகன் வெற்றி பெறுவார் அந்த சந்தோசம் சிறிது நேரத்தில் பொய்த்து போய்விடும் அதிக சந்தோஷ காரணத்தால் அவர் மார் அடைப்பில் இறந்து விடுவார்

அவரின் மகன் கனவான விளையாட்டு மையம் ஆரம்பிக்கிறார் விவேக் இதனால் கோபம் ஆனா அழகம்பெருமாள் விவேக் விளையாட்டு மையத்தையும் குழந்தைகளையும் பழிவாங்குகிறார் இவர்களிடம் இருந்து எப்படி இந்த குழந்தைகள் வாழ்கையில் முன்னேறுகிறார்கள் என்பது தான் மீதி கதை

படத்தின் முதல் வெற்றி படத்தில் நடித்த உண்மையான விளையாட்டு வீரர்கள் என்பது அதோடு அவர்களின் அபார திறமையை மிக அழகாக அவர்கள் வெளிபடுத்திய விதம் அவர்களிடம் இருந்து வேலைவாங்கிய இயக்குனர் மற்றும் சண்டை பயிற்சியாளர் மிராகல் மைகேல் ராஜ் இந்த இருவரையும் நிச்சயம் பாராட்டவேண்டும் படத்தின் மிக பெரிய பலம் இரண்டாம் பாகம் குறிப்பாக கிளைமாக்ஸ் சண்டை

‘இந்தியாவின் முதல் தற்காப்புக் கலை திரைப்படம்’ என்ற பெருமையைச் சுமந்து, பெற்றோர் பிள்ளைகளோடு, ஆசிரியர்கள் மாணவர்களோடு பார்க்கும்படி வந்திருக்கிற எளிமையான படம்.

ஒவ்வொரு குழந்தையும் மற்றும் பெற்றோர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் Rank 3/5