Thursday, October 29
Shadow

மண்ணின் மைந்தன் செந்தில் கணேஷ் நடிக்கும் கரிமுகன் டிரையலர் வெளியீடு

மக்கள் இசை மன்னன் செந்தில் கணேஷ் நாயகனாக நடிக்கும் கரிமுகன் படத்தின் டிரையலர் வெளியீட்டு விழா இன்று நடந்தது.

விழாவில்.பேசிய சமுத்திரக்கனி, ” செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியர் நமக்கு நெருக்கமான நம் மண்ணின் கலைஞர்கள். அவர்களிருவரையும் எனது அடுத்த படத்தில் நடிககவைக்கவிருக்கிறேன்..” என்றார்.

இசையமைப்பாளர் அம்ரிஷ் பேசும்போது, ” செல்லத்தஙகையாவின் வரிகளான சின்ன மச்சான் பாடலை செந்தில் கணேஷ் பாடி ஏற்கனவே யூடியூபில் பிரபலமாகியிருந்தது… அதனை, அதன் பிரமிப்பு குறையாமல் சார்லி சாப்ளின் 2:ல் அமைத்திருக்கிறோம்… இந்தப்படமும் அதைப்போலவே வெற்றிபெறும்..” என்று வாழ்த்தினார்.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் பேசும்போது, ” இத்தனை பெரிய ஜாம்பவான்கள் வந்து வாழ்த்தியதிலேயே எங்களது படம் வெற்றி பெற்று விட்டது..” என்று நெகிழ்ந்தார்.

டி.சிவா பேசும்போது, ” சூப்பர் சிங்கர் தயாரிப்பாளர் ரோஃபா வுக்கு நன்றி. செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி பாடிய சின்ன மச்சான் பாடலை சார்லி சாப்ளி 2 ல் வைத்திருக்கிறோம். பிரபு தேவா – நிக்கிகல்ராணி ஆடிப்பாடும் அந்தப்பாடலை இதுவரை 3 கோடி பேர் பார்த்திருக்கின்றார்கள். நாட்டுப்புற கலைஞர்களில் இருந்து இன்னும் அதிகமான திறமைசாலிகள் வருவதற்கு செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தம்பதியர் உந்துதலாக இருக்கிறார்கள்..” என்றார்.

கரிமுகனின் வில்லன் யோகிராம் பேசும்போது, ” இந்தப்படத்தில் நடிக்கும் போது செந்தில் கணேஷ் மிகவும் சாதாரணமாகத்தான் இருந்தார். ஆனால், மிகக்குறுகிய காலத்தில் அவரது நாட்டுப்புறப் பாடல் திறமையால், உலகளவில் புகழ்பெற்று நிற்கிறார்..” என்றார்.

சூப்பர் சிங்கர் இயக்குநர் ரோஃபா பேசும் போது, ” நாங்கள் அவர்களைப் பெரிதாகக் காட்டவில்லை… செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி தான் சூப்பர் சிங்கர்ஸ் நிகழ்ச்சியை பெரிதாக்கிவிட்டார்கள்..” என்றார்.

செந்தில்.கணேஷ் பேசும்போது, ” செல்ல தங்கையா தான் என் 8 வயதுமுதல் ஆசானாகத் திகழ்ந்து வழி நடத்துகிறார். எனக்கு முகவரி கொடுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கும், இன்னும் அதிகமாகச் சென்றடைய உதவிய சார்லி சாப்ளின் 2 படக்குழுவினருக்கும் பெரிய நன்றி. எங்களது பயணம் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்….” என்றார்.

புதுக்கோட்டைக்காரரான கரிமுகன் படத்தின் இயக்குநர் செல்ல தங்கையா, “இருளில் வாழ்கிற நாட்டுப்புறக்கலைஞர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிற அனைவருக்கும் நன்றி..” என்றார்.

கே.பாக்யராஜ் பேசும்போது, ” திரையில் தனது கணவரைப் பார்த்து மகிழ்ந்த ராஜலட்சுமியைப் பார்ப்பதில் மகிழ்ச்சி. டூயட் பாடும் போது, ஒளிப்பதிவாளர்களைக் கைக்குள் போட்டுக் கொள்ளவேண்டும்.. அப்பொழுதுதான், நம்மையும் கொஞ்சம் பளிச்சென்று காட்டுவார்கள்.. ” என்று சொல்லி அரஙகை கலகலப்பாக்கினார். தொடர்ந்து பேசிய அவர், “. சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் வாய்ப்புக்கேட்டு என் அலுவலக வாசலில் நின்றதாகச் சொன்னார்கள். அதே வலியை நானும் அனுபவித்திருக்கிறேன். அதனால் தான் என் அலுவலக வாசலில் காத்திருப்போர் அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாவிட்டாலும், ஒரு வார்த்தை பேசியாவது அனுப்பிவைப்பேன்..

டக்குனு செட்டாகிட்டா பெண்ணும் சரி சினிமாவும் சரி ருசிக்காது… கொஞ்சம் போராடித்தான் வெற்றியை ருசிக்கவேண்டும்.

செல்லதஙகையா ஜெயிக்கவேண்டும். செந்தில் கணேஷ் நன்றாக வருவார்..” என்றார்.

பி.எல்.தேனப்பன், வசந்தபாலன், இளன் ஆகியோரும் கரிமுகன் குழுவினரை வாழ்த்தினார்கள்.

செந்தில் கணேஷ் உடன் சூப்பர் சிங்கர் இறுதிச்சுற்றில் பங்கேற்ற, மாளவிகா, அருண் உள்ளிட்ட ஐந்துபேரும் வந்து பாட்டுப்பாடி வாழ்த்தியது விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது.