
உலகநாயகன் கமல்ஹாசன் அவரின் இளைய மகள் அக்ஷரா சமீப காலமாக ஒரு பிரகானையில் மாட்டிகொண்டுள்ளார் இணையதளங்களில் ஆபாச புகைப்படங்கள் வெளியானதால் மிகவும் வேதையடைந்த அசரா பதிவை பாருங்க
அந்தரங்க புகைப்படங்களை நீங்கள் மீண்டும் மீண்டும் ஷேர் செய்யும்போது நான் மிக ஆழமாக காயப்படுத்தப்படுகிறேன் என ட்விட்டரில் நெகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் அக்ஷரா ஹாசன்.
நடிகா் கமல்ஹாசனின் இளைய மகள் அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் அண்மையில் இணையத்தில் வெளியானது.
இது தொடர்பாக மும்பை காவல் நிலையத்தில் அக்ஷரா ஹாசன் புகார் அளித்துள்ளார். அதில், தனது அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்விட்டரில் இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “அண்மையில் எனது அந்தரங்க புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகின, இதை யார் செய்தார்கள் எதற்காக செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், சில பிறழ் மனம் கொண்டவர்களின் இச்சைக்காக ஒரு இளம் பெண்ணை இப்படி பழியாக்குவது துரதிர்ஷ்டவசமானது.
ஒவ்வொரு முறையும் அந்தப் படத்தை சிலர் கவர்ச்சித் தலைப்புகளுடன் பகிரும்போதும் நான் ஆழமாகக் காயப்படுத்தப்படுகிறேன். என் மீதான அத்துமீறலில் ஈடுபடுவோர் அதிகமாகின்றனர். நானோ கையறு நிலையில் இருக்கின்றேன்.
இந்த தேசமே #மீடூ என்ற ஓர் இயக்கத்துக்கு விழித்துக் கொண்டிருக்கும் சூழலில்கூட சில வக்கிர எண்ணம் கொண்டவர்கள் ஒரு இளம் பெண்ணின் புகைப்படங்களைப் பகிர்ந்து அதன் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர்.
நான் மும்பை போலீஸில் சைபர் செல் உதவியை நாடியுள்ளேன். இந்த புகைப்படங்களை வெளியிட்டது யார் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். விரைவில் உண்மை தெரியவரும்.
அதுவரும் இணையவாசிகள் எனது புகைப்படங்களைப் பகிர்ந்து என்னை இழுபடுத்துவதில் சுறுசுறுப்பாக இயங்க வேண்டாம் என்று கேட்கிறேன் வாழுங்கள் மற்றவர்கள் மரியாதையுடன் அவர்களை தனிப்பட்ட உரிமைகளை அத்து மீறாமல் வாழவிடுங்கள் என பதிவிட்டுள்ளர் .
