Wednesday, October 28
Shadow

நடிகர் மா. நா. நம்பியார் மறைந்த தினம்

மாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார் (மார்ச் 7[1], 1919 – நவம்பர் 19, 2008) தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக இருந்தார். குணச்சித்திரம் மற்றும் எதிர் நாயகனாக (வில்லன்) எண்ணற்ற திரைப்படங்களில் நடித்தார்.

கேரள மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் மலபார் மாவட்டம், தற்போதய கண்ணூர் மாவட்டம், சிரக்கல் வட்டத்தில் பெருவமூர் என்ற ஊரில் கேளு நம்பியார் என்பவருக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார் நம்பியார். இவருக்கு ஒரு தமையனாரும் ஒரு தமக்கையாரும் உள்ளனர். நம்பியாரின் எட்டாவது வயதில் தந்தை இறக்கவே தமையனார் வசித்து வந்த உதகமண்டலத்துக்குக் குடி பெயர்ந்து அங்குள்ள நகராட்சி உயர் பள்ளியில் மூன்றாம் பாரம் வரை படித்தார்.

1946 ஆம் ஆண்டில் தனது உறவினரான ருக்மணி என்பவரைத் திருமணம் புரிந்தார். பா. ஜ. கவின் முக்கிய தலைவராக இருக்கும் சுகுமாரன் நம்பியார் இவரது மகன். மோகன், சினேகா என்போர் இவரின் மற்ற குழந்தைகள் ஆவர்.

தொடர்ந்து படிக்க அவரது பொருளாதாரம் இடம் கொடாமையால், தனது 13 வயதிலேயே சென்னை நவாப் ராசமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்து [5] சேலம், மைசூர் எனச் சுற்றினார். ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. நாடகக் கம்பனியின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார். வேடம் போட்டால் தான் சம்பளம். இலவசச் சாப்பாடும், படுக்க இடமும் கிடைத்தது.

நவாப் கம்பனியின் ராம்தாஸ் என்ற நாடகத்தை 1935 ஆம் ஆண்டு பக்த ராம்தாசு என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். இதன் படப்பிடிப்புக்காக பம்பாய் சென்றார்கள். நம்பியாரும் கூடவே சென்றார். இப்படத்தில் அக்கண்ணா, மாதண்ணா என்ற நகைச்சுவை வேடங்களில் மாதண்ணா வேடத்தில் நம்பியார் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படமாகும். அக்கண்ணாவாக டி. கே. சம்பங்கி நடித்தார். இப்படத்தில் நடித்ததற்காக நம்பியாருக்கு நாற்பது ரூபாய் கொடுக்கப்பட்டது

திரைப்படங்களில் எதிர் நாயகனாக நடித்த போதும், தன்னுடைய வாழ்க்கையில் சிறந்த ஒழுக்கங்களை கடைபிடித்துவந்தார். திரையுலகில் சிறந்த ஆன்மீகவாதியாகவும், ஒழுக்கத்தில் சிறந்தவராகவும் அறியப்பட்டார். நம்பியார் தொடர்ந்து 65 ஆண்டுகளாக சபரி மலைக்குச் சென்று வந்தார்.

ஒரே ஒரு படத்தில் நடித்து முடித்து விட்டாலே ‘எங்கெங்கோ’ போய் விடும் இக்காலத்து நடிகர்களுக்கு மத்தியில், கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் நடிப்புலகில் தனி இடத்தைப் பிடித்து, தனது இடத்திற்கு அருகில் கூட யாரையும் அண்ட முடியாத அளவுக்கு தனி முத்திரையைப் பதித்து விட்டுச் சென்றிருக்கிறார் எம்.என். நம்பியார்.

இந்தியில் பிரான் என்று ஒரு வில்லன் நடிகர் இருந்தார். அவரது இடத்தை இன்னும் எந்த நடிகராலும் நிரப்ப முடியவில்லை. அப்படி ஒரு அபாயகரமான வில்லன். அவரது வசன உச்சரிப்பும், பாடி லாங்குவேஜும் அவ்வளவு அபாரமாக இருக்கும்.

தமிழுக்கும் அப்படி கிடைத்த பயங்கர வில்லன்தான் நம்பியார். அவரை நிஜமாகவே வில்லனாகப் பார்த்தார்களாம் அக்காலத்துப் பெண்கள். அந்த அளவுக்கு அவரது முக பாவனையும், வசன உச்சரிப்பும் படு தத்ரூபமாக இருந்ததுதான் காரணம். சில சினிமா கொட்டகைகளில் நம்பியார் ஸ்கீரினில் வருவத்தைக் கண்டு திரையையே கிழித்தார்களாம். அம்புட்டு பயம் க்லந்த வெறுபு.


கிட்டத்தட்ட 70 ஆண்டு கால நீண்ட, நெடிய பயணத்தைக் கொண்டது நம்பியாரின் திரையுலக அனுபவம். 7 தலைமுறை நடிகர்களுடன் நடித்து விட்ட பழுத்த அனுபவஸ்தர். வி்ல்லத்தனத்தில் மட்டுமல்லாமல், பக்தியிலும் அவருக்கு நிகர் அவர் மட்டுமே.

கிட்டத்தட்ட 65 ஆண்டு காலம் தொடர்ந்து சபரிமலைக்குப் போய் வந்தவர். இதனால்தான் அவரை குருசாமிகளுக்கெல்லாம் குருசாமி என்று அய்யப்ப பக்தர்கள் புகழ்ந்தார்கள், மரியாதை செய்தார்கள்.

இத்தனைக்கும் அந்தக் காலத்தில் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த வில்லன்கள் ஏராளம். அசோகன், பி.எஸ்.வீரப்பா, ஆர்.எஸ். மனோகர், ஓ.ஏ.கே. தேவர் என பலர். ஆனால் அவர்களுக்கெல்லாம் மகுடமாக, மகா வில்லனாக திகழ்ந்தவர் நம்பியார்.

அவருடைய பெயரை உச்சரித்தாலே ஒரு திகில் ஏற்படும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி மிரள வைத்த நம்பியாருக்கு அஞ்சலிகள்