
கஜா புயல் தாக்கம் டெல்டா பகுதிகளில் மிக பெரிய தாக்கத்தை உண்டுபண்ணியுள்ளது இதனால் விவசாயி மக்கள் மிகவும்பாதிக்கபட்டு உள்ளனர் இவர்களுக்கு முக்கியாமனவர்கள் மிக சொற்ப நபர்கள் மட்டுமே உதவி செய்து வருகின்றனர் குறிப்பாக சினிமாகாரர்கள் அதைவிட மிக மோசம் என்றால் அது தமிழகத்தின் மிக முக்கியமான பெறும் வியாபாரிகள் முதலீட்டார்கள் இவர்கள் யாரும் உதவ முன் வரவில்லை
என்பது தான் கொடுமை.
இந்த நாட்டுக்கு சோறு போடும் மக்கள் அங்கு சோற்றுக்கும் தங்க வசிதியும் இல்லாமல் தவித்து வருகின்றனர் இந்த சூழ்நிலையில் சிம்புவின் மிக அற்புதமான எண்ணம் மக்களுக்கும் மிக பெரிய உதவி கிடைக்கும்
கஜா புயலுக்கு பாதிப்புக்கு திரையுலகினர் பலர் உதவி வரும் நிலையில் நடிகர் சிம்பு ஒரு யோசனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :
டெல்டாவை நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது. இதில் நிறைய பேர் உதவி செய்கிறார்கள். நானும் என்னால் ஆன உதவிகளை செய்வேன். எனது ரசிகர்களும் செய்வார்கள். எல்லோரும் கொடுக்கும் உதவி நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்று சேர்கிறதா என்பது தெரியவில்லை.
சாமானியன் ஒரு பத்து ரூபாயைக் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால், என்ன செய்வார்? இதற்கு ஒரு வழி இருக்கிறது. நாம் அனைவரும் செல்போன் உபயோகம் செய்கிறோம். காலர் டியூன் பயன்படுத்த பணம் கொடுக்கிறோம்.
செல்போன் நெட் ஒர்க் மூலமாக அனைவரும் பணம் செலுத்த வாய்ப்பு இருக்கிறது. இதற்கு அனைத்து நெட்வொர்க்கும் இணைந்து செயல்பட வேண்டும். யார் யார் எவ்வளவு பணமெல்லாம் கொடுத்திருக்கிறார்கள் என்கிற மொத்த பட்டியலையும் அரசாங்கம் வெளியிட வேண்டும். நாம் அனைவரும் இதற்காக கரம் கோர்க்க முடியும்.
இது சாத்தியம் என நினைத்து செயல்பட விரும்பினால், #UniteForHumanity, #UniteForDelta என்ற ஹேஷ்டேக்கில் இதைக் கொண்டு சேருங்கள். இறைவன் இருக்கிறான். நல்லதுதான் நடக்கும்.
A nice thought and initiative by STR hope it all works out well #SaveDelta #uniteforhumanity #unitefordelta #STR pic.twitter.com/SFYsusYZs6— Yuvanshankar raja (@thisisysr) November 21, 2018
இவ்வாறு சிம்பு கூறியுள்ளார்.
