Thursday, October 29
Shadow

“மெரினாவும் எங்க பெருமை, தமிழ் சினிமாவும் எங்க பெருமை”. முருகன் மந்திரம் எழுதிய சென்னை புகழ் பாடும் பாடல்.

ஜெயதேவ் இயக்கத்தில் கலையரசன், சாயாசிங், அனஸ்வராகுமார் உள்பட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள பட்டினப்பாக்கம் திரைப்படத்தில் தமிழகத்தின் தலைநகர் சென்னை புகழ் பாடும் ஒரு பாடலை எழுதியுள்ளார் பாடலாசிரியர் முருகன் மந்திரம். அதுபற்றி முருகன் மந்திரம் கூறியதாவது,

நாம் பிறந்த ஊர், வாழும் ஊர்களின் பெருமையையும் புகழையும் நம்முடைய கலைகளின் வழியே பதிவு செய்யக்கிடைக்கும் வாய்ப்பு கொண்டாட்டமானது. பட்டினப்பாக்கம் படத்தில் எழுத வாய்ப்புகிடைத்த “சென்னை எங்க ஊரு” பாடல் எனக்கு அப்படி ஒரு கொண்டாட்டமான உணர்வையே தந்தது. பாடலின் வரிகள் அத்தனையும் எனக்குப்பிடிக்கும். வரிகளுக்கு ஏற்றார்போலவே சென்னையை, சென்னையின் பல பகுதிகளை பாடலில் காட்சிப்படுத்தி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதே படத்தில் “அன்பே எந்தன் தனிமை தின்று போ போ” என்றொரு துள்ளல் காதல் பாடலும் எழுதி இருக்கிறேன். அந்த பாடல் வரிகளும் மிக அற்புதமாக வந்திருக்கிறது. இன்றைய யுவன்களுக்கும் யுவதிகளுக்கும் ரொம்பவே பிடிக்கும் அந்தப்பாடல். பாடலுக்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தந்த இசையமைப்பாளர் இஷானுக்கும் இயக்குநர் ஜெயதேவ்க்கும் நன்றியும் வாழ்த்துகளும், என தன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டார்.