Wednesday, October 28
Shadow

வசூலில் புதிய சாதனை படைத்த 2.0

இயக்குனர் ஷங்கர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘2.௦’ இந்தியாவில் மொத்தமாக 56-57 கோடி கலெக்ஷனை பெற்றுள்ளது. இந்த படத்தின் ஹிந்தி வெர்சன்
குறிப்பாக வடக்கு மற்றும் மும்பையில் அதிகளவில் வசூல் செய்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘2.௦’. இந்த திரைப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக எமிஜாக்சன் மற்றும் வில்லனாக பாலிவுட் நடிகர் அக்சய் குமார் நடித்துள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தினை சுமார் 600 கோடி பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் லைக்கா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கடந்த வியாழக்கிழமை உலகம் முழுவதும் சுமார் 10000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், ‘2.௦’ படம் பாகுபலி 2 படத்தை விட அதிக தியேட்டர்களில் வெளியானதால் முதல் நாள் வசூலில் பாகுபலி 2வை வீழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ‘2.௦’ படம் முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலிக்கும் எனவும், உலகம் முழுவதும் ரூ.135 கோடி வசூலிக்கும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கு முன்னர் முதல் நாளில் பாகுபலி 2 ரூ.125 கோடி வசூல் செய்தது.

‘2.௦’ படம் இந்தியாவில் மட்டும் ரூ.75 கோடி வசூல் செய்தது. இதனால் ‘2.௦’ படம் பாகுபலி 2 படத்தை முறியடிக்க முடியவில்லை. ஆனால் 2018ஆம் ஆண்டில் வெளியான படத்தில் முதல் நாளில் அதிக வசூல் செய்து ‘2.௦’ சாதனை படைத்துள்ளது. சர்கார் முதல் நாளில் ரூ.70 கோடி வசூலித்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

தமிழ்நாட்டில் இந்த படம் வெளியான கடந்த வியாழக்கிழமை மாலை 12 முதல் 13 கோடி வசூல் செய்தது இந்த வசூல் சாதனைக்கு நடிகர் ரஜினிகாந்த்தும் ஒரு காரணமாகும். கடந்த 38 ஆண்டுகளாக சினிமா துறையை ஆக்கிரமித்து வரும் மெகா ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களில் 2.0 இந்தியாவில் வசூல் நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வியாழக்கிழமை – சராசரியாக ரூ. 64,00,00,000

வெள்ளிக்கிழமை – சராசரியாக ரூ. 45,00,00,000

சனிக்கிழமை – சராசரியாக ரூ. 56,50,00,000

மொத்தமாக – சராசரியாக ரூ. 1,65,50,00,000

இந்த படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 200 கோடியை கடந்து விட்டது. மேலும் சர்வதேச அளவில் நான்கு நாட்களை அதிக வசூல் செய்துள்ளது. மொத்தமாக உலகளாவிய வசூல் நிலவரத்தை பார்க்கும் போது, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 300 கோடியை கடந்து விட்டது.