Wednesday, October 28
Shadow

நடிகையர் திலகம் சாவித்திரி மறைந்த தினம்

கொம்மாரெட்டி சாவித்திரி அல்லது சாவித்திரி கணேஷ் புகழ் பெற்ற ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை, திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் 318 படங்களில் நடித்திருக்கிறார்.

திரையுலகில் 1950, 60 மற்றும் 70-களில் சகாப்தமாக வாழ்ந்தவர், நடிகை சாவித்திரி. தமிழ், தெலுங்கு, இந்தியில் 318 படங்களில் குடும்பப்பாங்கான வேடங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஈர்த்து வைத்து இருந்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரங்காராவ் ஆகியோருடன் பல படங்களில் நடித்து இருந்தார்.

பாசமலர் படத்தில் பாசக்கார தங்கையாகவும், திருவிளையாடலில் சக்தியே பெரிது என்று வாதாடும் ஈசனின் மனைவியாகவும், படித்தால் மட்டும் போதுமா படத்தில் அன்பான மனைவியாகவும் கவர்ந்தார். பாவமன்னிப்பு, நவராத்திரி, கர்ணன், களத்தூர் கண்ணம்மா, பரிசு, கந்தன் கருணை, மாயாபஜார் உள்ளிட்ட பல படங்கள் சாவித்திரியின் திறமையான நடிப்பில் வெளிவந்து வசூல் சாதனை படைத்தன.

சிறந்த நடிப்பால் ‘நடிகையர் திலகம்’ என்ற பட்டம் அளித்து பாராட்டப்பட்டார். நடிகர் ஜெமினி கணேசனை காதல் திருமணம் செய்து கொண்டார். படங்களை டைரக்டும் செய்தார். சென்னையில் மாளிகை போல் வீடு கட்டி அதற்குள் நீச்சல் குளம் அமைத்த முதல் நடிகை இவர்தான். கதாநாயகியாக இருந்தபோது செல்வ செழிப்பில் புகழின் உச்சியில் இருந்த அவர் கடைசி காலத்தில் சினிமா தயாரிப்பில் பணத்தை இழந்து உடல் நலம் குன்றி கஷ்டப்பட்டு இறந்தார்.