Wednesday, October 28
Shadow

சமுக வலைதளங்களில் தளபதியின் 100 கோடி சாதனை

தென்னிந்திய நடிகர்களில் விஜய் கடந்த சில ஆண்டுகளாக சமூக வலைதளங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் சமீப காலமாக சினிமா பாடல்கள், வசனங்கள் பேசி வீடியோக்களை பதிவிடும் டிக்டாக் செயலி இளைய தலைமுறையினரிடம் பிரபலமாகி உள்ளது. இதிலும் நடிகர் விஜய்க்கு முதலிடம் கிடைத்துள்ளது.

சுமார் 100 கோடி முறை விஜயின் ஹாஷ்டேக்குகள் இந்த செயலியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கடுத்து இந்த வரிசையில் சூர்யா, ரஜினி, அஜித் ஆகியோர் வருகின்றனர். இவர்களது பெயர் மில்லியன் கணக்கில்தான் ஹாஷ்டேக்குகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

முன்னதாக ட்விட்டர் அதிகளவு பயன்படுத்தப்பட்ட ஹாஷ்டேக்குகளில் விஜய் நடித்த சர்கார் திரைப்படம் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது. மேலும் இந்தியளவில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்களில் விஜய் 8 ஆம் இடம் கிடைத்தது.#vijay #tiktak #thalapathy