Friday, May 1
Shadow

அன்று அம்மாவுடன் ஜோடியாக நடித்த ரஜினிகாந்த் இன்று மகளுடன் ஜோடி சேருகிறார்

இயக்குனர் முருகதாஸ் மற்றும் ரஜினிகாந்த் இணையும் படம்  அரசியல் சார்ந்த படம் என்று கூறப்படுகிறது.ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளாராம் ஏ. ஆர். முருகதாஸ். தொடர்ந்து சீனியர் ஹீரோக்களுடன் ஜோடி போடும் கீர்த்தி இந்த படம் மூலம் சூப்பர் சீனியரின் ஜோடியாக உள்ளார்.

 

தன் மகள்களை விட சிறு வயது நடிகைகளுடன் இனி ஜோடி சேர்ந்து நடிக்கப் போவது இல்லை என்று காலா இசை வெளியீட்டு விழாவில் ரஜினி தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் மகள்களை விட மிகவும் சிறியவரான கீர்த்தியுடன் சேர்ந்து நடிக்க உள்ளார்.

அன்று இவரின் அம்மா மேனகாவுடன் நெற்றிக்கண் படத்தில் நடித்தார் இன்று மகள் கீர்த்தி சுரேஷ்வுடன் நடிக்க இருக்கிறார்.என்பது மிகவும் வருத்தக்க விஷயம்.

ஹீரோயின் வயது பற்றி ரஜினிகாந்த் தெரிவித்தது ஏ. ஆர். முருகதாஸுக்கும் தெரியாமல் இருக்காது. ஹீரோயின் தேர்வில் ரஜினி தலையிடுவது இல்லை. இந்நிலையில் இந்த படத்தின் ஹீரோயின் மாற்றப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.முருகதாஸ் படத்தில் ரஜினி முதல்வர் ஆகிறாராம். அந்த தகவல் அறிந்தவர்கள் முதலில் அவரை கட்சி துவங்கச் சொல்லுங்கள் அப்புறம் முதல்வர் ஆகலாம். அவரால் படத்தில் மட்டுமே முதல்வர் ஆக முடியும் என்று விமர்சித்துள்ளனர்.மீனாவுடன் இவர் ஏற்கனவே நடித்தவர் தானே ஆனால் அன்று ரஜினிகாந்த் சற்று இளமையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.