Friday, May 1
Shadow

இசைஞானிஇளையாராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் “தமிழரசன்”

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தன் இசையால் அனைவரையும் கவர்ந்தவர் விஜய் ஆண்டனி ஒரு இசையமைப்பாளராக தன் பணியை சிறப்பாக செய்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை தன் பக்கம் சேர்த்தவர் பின்னர் கதாநாயகனாக் அவதாரம் எடுத்தார் அதிலும் தொடர்ந்து சிறப்பான கதையம்சம் கொண்ட படங்கள் கொடுத்து மிக பெரிய இடத்தை பிடித்தார் அதோடு தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன்கள் பட்டியலில் இடம் பிடித்தார்

அதற்கான முக்கிய காரணம் இவரின் கதாபாத்திரமும் கதைகளும் தான் தொடர் வெற்றி வியாபார ரீதியாக வெற்றி நாயகன் என்றும் பேர் எடுத்தார் தற்போது அருண் விஜயுடன் ஒரு படம் அதோடு கொலைகாரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது இவரின் அடுத்த படத்தின் அறிவிப்பு வந்துள்ளது படத்தின் பெயர் தமிழரசன் படத்தின் தலைப்பில் எப்பவும் கவரும் விஜய் ஆண்டனி இந்த படத்தின் தலைப்பிலும் ரசிகர்களை கவர்கிறார் இதைவிட இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இவர் படத்துக்கு இசையமைப்பாளர் யார் தெரியுமா இசைஞானி இளையராஜா தான்

இளையராஜா இசையில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம் “தமிழரசன்”பாபு யோகேஸ்வரன் இயக்குகிறார்…SNS மூவிஸ் சார்பில் கெளசல்யா ராணி தயாரிக்கிறார்…படப்பிடிப்பு நாளை காலை சென்னையில் துவங்குகிறது.. மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடக்கிறது அநேகமாக நாழி வெளியாகும் என்று கூறபடுகிறது.

இளையராஜா இன்னொரு இசையமைப்பாளர் ஹீரோவாகும் படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது…