
ஏற்கனவே இரண்டு முறை காதலில் தோல்வி கண்ட நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கொண்டு இருப்பது நாம் அறிந்த விஷயம் இந்த காதலுக்கும் ஒரு கதை இருக்கு வாங்க பாக்கலாம்
இயக்குநர் விக்னேஷ் சிவன், வெகு காலமாக நடிகை நயன்தாராவை காதலித்து வருகிறார். இதன் காரண காரியத்தை நடிகர் பார்த்திபன் கண்டறிந்திருக்கிறார்.
இது குறித்து, அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது: நல்ல விஷயங்கள் எதுவோ, அதை அப்படியே ஏற்று கொள்கின்ற பக்குவம் உள்ள மனிதராக இருக்கிறார் விக்னேஷ் சிவன். இல்லையென்றால், நயன்தாரா போன்ற ஒருவர் அவரை காதலிக்க முடியாது. ஒரு சாதனை பெண்மணி, ஒருவரைக் காதலிக்கிறார் என்றால், காதலிக்கப்படும் நபருக்கு எக்ஸ்ட்ரா குவாலிஃபிகேஷன் இருக்க வேண்டும். அந்த குவாலிகேஷன் விக்னேஷ் சிவனிடம் இருக்கிறது. அதை நான் அவரிடம் பார்த்தேன். பொறாமை கொள்ளும் ஜோடி தான். ஆனால், மிகப் பொருத்தமான ஜோடி.
இவ்வாறு, பார்த்திபன் கூறியுள்ளார்.
