
அஜித் காட்டில் அடை மழை காரணம் எல்லாம் விஸ்வாசம் படம் தொடர்ந்து சுமாரான படங்களை கொடுத்த இயக்குனர் தனது நான்காவது படம் மூலம் அஜித்துக்கு பல பெருமைகளை சேர்த்து விட்டார் என்று சொன்னால் மிகையாகாது
அஜித்தின் ‘விஸ்வாசம்’ படம் பொங்கல் பண்டிகைக்காக திரைக்கு வந்தது. படம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்ததால், இன்றும் படம் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. கிட்டதட்ட நூறு தியேட்டர்களுக்கு கூடுதலான தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், தற்போது சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான ஜிகே சினிமாஸில் ‘விஸ்வாசம்’ படம் 39வது நாளிலும் ஹவுஸ்புல் காட்சியாக ஓடுகிறதாம். அதை, அந்த தியேட்டரின் உரிமையாளரே டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், ‘விஸ்வாசம்’ படத்தின் 50வது நாள் அன்று சிறப்பு கொண்டாட்டம் இருக்கும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
மேலும், சென்னை ரோஹினி திரையரங்கிலும் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சி தான் என்று தெரிவித்துள்ளனர். எப்படியோ அஜித் காட்டில் சாதாரண மழை இல்லை; அடை மழைதான்.
