
தமிழ் சினிமாவில் மிகவும் இரபலமான நடிகையாக திகழ்பவர் ஓவியா இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அதுக்கு பிக் பாஸ் தான் காரணம் என்று நாம் அறிந்த விஷயம் அந்த நிகழ்ச்சியில் இவரின் குழந்தைத்தனமான செயல்களால் மக்களுக்கு இவரை பிடித்த்தது அதோடு நம் வீடு பெண் என்று சொல்லும் அளவுக்கு ஒரு பந்தம் ஏற்பட்டது ஆனால் இன்று ஒட்டு மொத்த மக்கள் எதிர்ப்பு காரணம் இவர் நடிக்கும் 90 ML படம்
நடிகை ஓவியா நடித்துள்ள 90 எம்எல் படம் நாளை மறுநாள் வெளிவருகிறது. இதில் அவர் லிப்லாக் முத்தக்காட்சி, மது அருந்தும் காட்சி, புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடித்துள்ளார். மேலும் இரட்டை அர்த்தம் வசனங்கள் நிறைந்த அடல்ட் படமாக இந்தப்படம் உருவாகி இருப்பதால் கடும் விமர்சனத்த்திற்கும் உள்ளானார். இதுகுறித்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
90 எம்எல் படம் ஆணாதிக்கத்துக்கு எதிரான படம். பெண்கள் சுதந்திரத்துடன் வாழ வேண்டும் என்று வலியுறுத்துகிற படம். ஆண்கள் செய்கிற அனைத்தையும் பெண்களும் செய்ய உரிமை உண்டு என்கிற படம். ஆண்கள் மது அருந்துகிற, புகைபிடிக்கிற காட்சிகளில் நடிக்கும்போது எதிர்க்காதவர்கள் அதையே பெண்கள் செய்யும்போது ஏன் எதிர்க்க வேண்டும். ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா. சில மாதங்களுக்கு முன்பு வரை நான் சிகரெட் புகைத்தேன். அது என் உரிமை, இப்போது உடல்நிலை கருதி நிறுத்தி விட்டேன். அதுவும் என் உரிமை இதை யாரும் கேள்வி கேட்க முடியாது.
90 எம்எல் டீசர் பார்த்து விட்டு ஏன் இத்தனை விமர்சனம் என்று எனக்குத் தெரியவில்லை. நான் இந்தப் படத்தில் நிர்வாணமாகவா நடித்து விட்டேன். கற்பழிப்பு காட்சியில்கூட நடிக்கவில்லை, முத்தம் கொடுப்பது அவ்வளவு பெரிய தப்பா. நான் கவர்ச்சியாக நடித்திருப்பது உண்மை. ஆனால் ஆபாசமாக நடிக்கவில்லை. ஆபாசத்துக்கும், கவர்ச்சிக்கும் என்ன வேறுபாடு என்பது பார்ப்பவர்களில் பார்வையை பொறுத்தது. என் ரசிகர்கள் என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியும், அதை கொடுக்க வேண்டியது என் கடமை. அதைச் செய்திருக்கிறேன்.
நான் நடித்த கேரக்டருக்கு என்ன தேவையோ அதைச் செய்திருக்கிறேன். அதை தாண்டி ஒரு காட்சி நடித்திருந்தால் என்னை கேள்வி கேளுங்கள். 90 எம்எல் படத்தில் அல்ட்ரா மார்டன் பொண்ணு, அதனால் குறைவான ஆடை அணிந்து நடித்திருக்கிறேன். என் காதல் பற்றி தொடர்ந்து கேட்கிறார்கள். அது ஊருக்கே தெரியும். காதலில் எனக்கு நிறைய நம்பிக்கை உண்டு. திருமணத்தில் நம்பிக்கை இல்லை. சிலபேர் என்னை அரசியலுக்குகூட கூப்பிட்டார்கள். அடபோங்கப்பா எனக்கு சினிமாவில் நிறைய வேலை இருக்கிறது என்று சொல்லிவிட்டேன். என்றார் ஓவியா
