Sunday, November 8
Shadow

ஆஸ்கார் விருது வாங்கிய நிறுவனத்துடன் இணையும் சூர்யா

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி ஹீரோவாக வலம் வரும் சூர்யா பல போராட்டங்களுக்கு பின் இந்த இடத்தை பிடித்துள்ளார் இதற்கு முக்கிய காரணம் இவரின் கதை கள தேர்வு தான் முக்கியம் அந்த வகையில் வித்தியாசமான படங்களில் நடித்து வரும் சூர்யா தற்போது அப்படியான ஒரு கூட்டணியுடன் இணைகிறார்

தற்போது கே.வி.ஆனந்த் டைரக்சனில் சூர்யா தனது 37வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்ததும் அவரது 38வது படத்தை இறுதிச்சுற்று புகழ் சுதா கொங்கரா இயக்க உள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்த நிலையில் பாலிவுட்டை சேர்ந்த குனீத் மோங்கா என்பவரின் ஷிக்யா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சூர்யாவுடன் கூட்டணி சேர்ந்து இந்த படத்தை தயாரிக்க இருக்கிறதாம்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 91 வது ஆஸ்கார் விருது பட்டியலில் இந்த நிறுவனம் தயாரித்த ‘பீரியட் : என் ஆப் சென்டென்ஸ்’ என்கிற குறும்படம் ஆஸ்கர் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம் ஹிந்தியில் கேங்ஸ் ஆப் வசிபூர்-1, தி லஞ்ச்பாக்ஸ், மஸான் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது.