Wednesday, April 30
Shadow

பொதுமேடையில் நடிகை கஸ்தூரியை திட்டிய கார்த்தி

காவியா என்டர்டைன்மென்ட் சார்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் ஜூலை காற்றில். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், முன்னணி நடிகர் கார்த்தி ஆகியோருடன் படத்தின் இணை தயாரிப்பாளர் கருப்பையா, படத்தின் இயக்குனர் கே சி சுந்தரம், படத்தின் இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர், பாடலாசிரியர் சௌந்தர், நடன இயக்குனர் ஸ்ரேயா தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜுலை காற்றில்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் இன்று(மார்ச் 4) நடைபெற்றது. இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார், நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு இசையை வெளியிட்டனர்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி, கார்த்தியைப் பேச அழைக்கும்போது, “ஒரு நிமிடம், உங்க அப்பா இங்க இல்லை, அதனால் ஒரு செல்பி எடுத்து கொள்கிறேன்,” என்று கார்த்தியை தன் பக்கம் இழுத்தார். இதைச் சற்றும் எதிர்பாராத கார்த்தி, கோபத்துடன் நகர்ந்து, மைக்கைப் பிடித்து, “தேவை இல்லாத ஒரு விஷயமா இருக்கு. செல்பி எடுப்பதற்கு ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. கேட்டு போட்டோ எடுக்கணும்கறது கிடையாது. மூஞ்சிக்கு முன்னாடி வந்து நிக்கிறது. முன்னாடி ஒரு பிளாஷ், பின்னாடி ஒரு பிளாஷ். அவ்வளவு பிளாஷ், கண்ல பட்டால் மைக்ரைன் இருக்கிறவங்களுக்குப் என்ன ஆகும். ஒரு விவஸ்தையே கிடையாதுன்னு நினைக்கிறேன், வருத்தமா இருக்கு. இப்ப சொன்னால்தான் உண்டு,” என்று கடுமையாகப் பேசினார்.

கார்த்தி பேசி முடித்த பின் மீண்டும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வந்த கஸ்தூரி, கார்த்தியின் கோபத்தைப் புரிந்து கொண்டு அதை ஒருவழியாகப் பேசி, நான் செல்பியே எடுக்கலை எனச் சொல்லி சமாளித்தார்.