Friday, April 17
Shadow

அடார் லவ் தோல்வியை பற்றி பேசினால் பிரச்சனை வரும் நாயகி பிரியா வாரியார்

மலையாள மொழியில் இயக்குநர் ஓமர் லுலு இயக்கிய ஒரு அடார் லவ் திரைப்படத்தின் ‘மணிக்கய மலரே’ என்ற பாடல் காதலர் தினத்தன்று வெளியிடப்பட்டது. இப்பாடல் மிகப் பெரிய வைரலாக மாறியது. இப்பாடலில் நடித்த பிரியா வாரியர் தனது புருவ சிமிட்டலின் மூலம் ஒரே நாளில் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகையாக உச்சத்தை தொட்டார்.

அதேபோல் படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதனால் மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் 2019-ம் ஆண்டு காதலர் தினத்தன்று அடார் லவ் படம் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறாமல் படுதோல்வி அடைந்த இந்தப் படம் ரசிகர்களிடையே மோசமான விமர்சனங்களையும் பெற்றது.

படத்தின் தோல்வி குறித்து படக்குழுவினர் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். தொடக்கத்தில் எனது கதாபாத்திரத்துக்குத் தான் முக்கியத்துவம் இருந்தது என்று கூறிய நூரின் ஷெரீஃப், பிரியா வாரியரின் வீடியோ பிரபலமானதால் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து கதையை மாற்றிவிட்டனர் என்று கூறினார்.