
பிரபல இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலக இயக்கநர்களின் கதாநயராகவும், வாழ்நாள் முழுவதும் எளிமைக்கு இலக்கணமாக விளங்கியவர் மகேந்திரன் என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள வீட்டில் மறைந்த மகேந்திரன் உடலுக்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் சிம்புதேவன், நடிகை ரேவதி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் தந்தவர் இயக்குநர் மகேந்திரன் என்று வைரமுத்து இரங்கல்
வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகந்தான் வாழ்க்கை என்பது மகேந்திரன் படைப்புகளில் உள்ள கலைச் செய்தி- வைரமுத்து
மகேந்திரனை இழந்து வாடும் குடும்பத்தார், கலையன்பர்களுக்கு இரங்கல் சொல்லிக்கொண்டு எனக்கு நானே ஆயுதல் கூறிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்
