Sunday, June 21
Shadow

Tag: இயக்குநர்

இயக்குநர் ஸ்ரீதர் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ஸ்ரீதர் புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இயக்குனரும், வசனகர்த்தாவும் ஆவார். தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் மற்றும் பாலிவுட்டிலும் பெரும் வெற்றியினை ஈட்டியவர் ஸ்ரீதர். ரத்தப்பாசம் என்ற படத்தின் மூலம் வசனகர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கியவர் ஸ்ரீதர். அந்த நாட்களில் மிகுந்த புகழ் பெற்றிருந்த இளங்கோவனின் வசனத்தால் ஈர்க்கப்பட்டு திரையுலகை நாடியவர் ஸ்ரீதர். தொடக்கத்தில் அமரதீபம், உத்தம புத்திரன், புனர் ஜன்மம், எதிர்பாராதது போன்ற பல படங்களுக்கு வசனகர்த்தாவாகப் பணி புரிந்து வந்தார். ஸ்ரீதர் இயக்கிய முதல் படமான கல்யாணப்பரிசு ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் 1957ஆம் ஆண்டு வெளியானது. வீனஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இயக்கிய இத்திரைப்படம், சரோஜாதேவி கதாநாயகியாக முதலில் அறிமுகமான படம் என்பதும், அதுவரை பாடகராக மட்டு...
இயக்குநர் சுரேஸ் கிருஷ்ணா பிறந்த தின பதிவு

இயக்குநர் சுரேஸ் கிருஷ்ணா பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
சுரேஸ் கிருஷ்ணா இந்தியத் திரைப்பட இயக்குனராவார். இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களை இயக்கியுள்ளார். சத்யா என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவர் ரசினிகாந்து நடித்த அண்ணாமலை, வீரா, பாட்ஷா, பாபா ஆகியவற்றை இயக்கியுள்ளார். மோகன்லால், விஷ்ணுவர்தன், கமல்ஹாசன், சிரஞ்சீவி (நடிகர்), சல்மான் கான், வெங்கடேஷ் மற்றும் உபேந்திரா போன்ற நடிகர்களின் படங்களை இயக்கியுள்ளார்....

இயக்குநர் மிருணாள் சென் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
மிருணாள் சென் என்பவர் கல்கத்தாவைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர். இந்திய திரைப்படங்களை உலகத் தரத்துக்கு உயர்த்திய திரைப்பட இயக்குநர்களில் ஒருவர். இவர் இந்தி, தெலுங்கு, ஒடிசா, வங்கம் ஆகிய 4 மொழிகளில் ஏறக்குறைய 34 திரைப்படங்கள், 14 குறும்படங்கள் 4 ஆவணப்படங்களை இயக்கியுள்ளார். இவரைப் பற்றியும் திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. மிருணாள் சென் தற்போதைய வங்காள தேசத்தில் உள்ள ஃபரீத்பூரில் ஒரு இந்து குடும்பத்தில் 1923இல் பிறந்தார். பள்ளிப் படிப்பை சொந்த ஊரில் முடித்தபின் கல்லூரி படிப்புக்காக கல்கத்தா வந்தார். கல்கத்தா ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் இயற்பியலும், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலையும் பயின்றார். இவர் இந்திய பொதுவுடமைக் கட்சியின் சார்பான கலைப் பண்பாட்டு பிரிவில் ஈடுபாட்டுடன் இருந்தார் என்றாலும் கட்சியில் உறுப்பினராகவில்லை. கொல்கத்தாவில் படிக்க வந்தபோது ரூடால்ஃப் ஆர்ன்ஹைம் எழுதிய ‘ஃபில...
மறைந்த இயக்குநர் மகேந்திரன் பெயரில் விருது – இயக்குநர் சங்கம் முடிவு

மறைந்த இயக்குநர் மகேந்திரன் பெயரில் விருது – இயக்குநர் சங்கம் முடிவு

Latest News, Top Highlights
மறைந்த இயக்குநர் மகேந்திரன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை வளசரவாக்கத்தில் உள்ள இயக்குநர் சங்க அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குநர்கள் மனோ பாலா, பேரரசு, யார் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய மனோ பாலா, மகேந்திரன் பெயரில் விருது வழங்க வேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் சங்கப் பொருளாளர் இயக்குநர் பேரரசு, மகேந்திரன் பெயரில் இயக்குநர் சங்கம் சார்பில் விருது வழங்கப்படும் என்று கூறினார். மேலும் தமிழக அரசு சார்பில் மகேந்திரன் பெயரில் விருது ஒன்றை உருவாக்க கோரிக்கை வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்....

நடன இயக்குநர் ராஜூ சுந்தரம் பிறந்த தின பதிவு

Birthday, Top Highlights
ராஜூ சுந்தரம் தமிழகத் திரைப்படத்துறை நடிகர், இயக்குநர், நடன இயக்குநர் என பல பரிணாமங்களை கொண்டவராவார். இவர் நடன இயக்குநரான சுந்தரம் மாஸ்டரின் மூத்த மகனும், பிரபு தேவா மற்றும் நாகேந்திர பிரசாத்தின் சகோதரனும் ஆவார். இவர் பிரபுதேவா மற்றும் நாகேந்திர பிரசாத் ஆகியோருக்கு மூத்த சகோதரன் ஆவார். இவருடைய தந்தை கன்னட மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற நடன இயக்குனரான சுந்தரம் மாஸ்டர் ஆவார். கன்னட சூப்பர் ஸ்டார் என்று போற்றப்படும் ராஜ் குமாரின் திரைப்படங்களுக்கு இவர் தந்தை நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவருடைய இயற்பெயர் ராஜேந்திர சுந்தரம் என்பதாகும். பின்பு இப்பெயர் ராஜூ சுந்தரம் என்று சுருக்கி அழைக்கப்பெற்றது. இதேபோல இவர் சகோதரரான பிரபு சுந்தரம் - பிரபுதேவா என்றும், நாகேந்திர சுந்தரம் - நாகேந்திர பிரசாத் என்றும் ஆனது. இவர் நடன இயக்குனராக இருப்பினும் பல்வேறு திரைப்ப...
மறைந்த இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரையுலக பிரபலங்கள்

மறைந்த இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திரையுலக பிரபலங்கள்

Latest News, Top Highlights
இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை ரேவதி, இயக்குநர் சிம்புதேவன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. பல படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரது படங்கள் பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்துள்ளது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்....
பிரபல இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

பிரபல இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

Latest News, Top Highlights
பிரபல இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலக இயக்கநர்களின் கதாநயராகவும், வாழ்நாள் முழுவதும் எளிமைக்கு இலக்கணமாக விளங்கியவர் மகேந்திரன் என அவர் தெரிவித்துள்ளார். சென்னை பள்ளிக்கரணையில் உள்ள வீட்டில் மறைந்த மகேந்திரன் உடலுக்கு திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இயக்குநர் சிம்புதேவன், நடிகை ரேவதி உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் தந்தவர் இயக்குநர் மகேந்திரன் என்று வைரமுத்து இரங்கல் வலிகளுக்கு மத்தியில் உள்ள சுகந்தான் வாழ்க்கை என்பது மகேந்திரன் படைப்புகளில் உள்ள கலைச் செய்தி- வைரமுத்து மகேந்திரனை இழந்து வாடும் குடும்பத்தார், கலையன்பர்களுக்கு இரங்கல் சொல்லிக்கொண்டு எனக்கு நானே ஆயுதல் கூறிக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்...
மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு சுகாசினி, வைரமுத்து, பார்த்திபன் அஞ்சலி

மறைந்த இயக்குநர் மகேந்திரனுக்கு சுகாசினி, வைரமுத்து, பார்த்திபன் அஞ்சலி

Latest News, Top Highlights
இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வைரமுத்து புகழாரம் தமிழ் சினிமாவுக்கு இந்திய உயரம் தந்தவர் மகேந்திரன் மகேந்திரன் மறைவு குறித்து நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் தனது இரங்கல் செய்தியில், முள்ளும் மலரும் மரணம்?. இன்னும் நூறு வருடமாவது வாழும் மகேந்'திறன்'!!! பலரின் மரணம் வருத்தமளிக்கும். சாகுறவரைக்கும் சாதிக்கலையேன்னு...ஆனால் மகேந்திரன் சாரின் புகழ் இன்னும் நூறு வருடங்கழித்தும் சாகாது. நடிகை சுகாசினி இரங்கல் உடல் நலக்குறைவால் இன்று காலமான பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நடிகை சுகாசினி தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள டுவிட்டர் பதிவில், சிறந்த இயக்குனர் மகேந்திரன் சார் மறைவுக்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. ந...

மறைந்த இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

Latest News, Top Highlights
இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை ரேவதி, இயக்குநர் சிம்புதேவன் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. பல படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரது படங்கள் பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்துள்ளது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகை சுகாசினி இரங்கல்:  உடல் நலக்குறைவால் இன்று காலமான பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவுக்கு நடிகை சுகாசினி தனது டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பத...
பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் காலமானார்

Latest News, Top Highlights
இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் இன்று காலமான நிலையில், அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற இயக்குனரான மகேந்திரன் (79) சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். உதிரிப்பூக்கள், முள்ளும் மலரும், ஜானி, காளி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட பல படங்களை இயக்கியிருக்கிறார். மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே திரைப்படம் 3 தேசிய விருதுகளை பெற்றுள்ளது. பல படங்களில் நடித்தும் இருக்கிறார். இவரது படங்கள் பல்வேறு இளம் இயக்குநர்களுக்கு சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்தை கொடுத்துள்ளது. இவரது மறைவுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் மகேந்திரன் 1939 ஆம் ஆண்டு இளையான்குடியில் பிறந்தவர். தந்தை ஜோசப் செல்லையா ஆசி...