Thursday, November 13
Shadow

சூப்பர் ஸ்டார் ராஜினிக்காந்துடன் இணைகிறாரா இயக்குனர் விக்னேஷ் சிவன்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சந்திரமுகி, குசேலன் படங்களுக்குப்பிறகு மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா.

இந்தநிலையில், நயன்தாரா மும்பைக்கு படப்பிடிப்புக்கு செல்லும்போது அவருடன் சென்ற அவரது காதலர் விக்னேஷ் சிவன், ரஜினியுடன் போட்டோ எடுத்துள்ளார். அந்த போட்டோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

அதையடுத்து, பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ் என இளவட்ட டைரக்டர்களின் படங்களில் ரஜினி தற்போது நடித்திருப்பதால், தர்பார் படத்திற்கு பிறகு அவர் விக்னேஷ்சிவன் இயக்கும் படத்திலும் நடிக்கலாம் என்றொரு செய்தியும் பரவிக் கொண்டிருக்கிறது. ஆனால் அது உண்மையல்ல.