Thursday, November 13
Shadow

எழுத்தாளர் கபிலன் வைரமுத்து பிறந்த தின பதிவு

கபிலன் வைரமுத்து  கபிலன் வைரமுத்து தமிழ் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், நாவலர், வசன எழுத்தாளர், மற்றும் சமூக ஆர்வளர் ஆவார். இவர் கவிஞர் வைரமுத்து அவர்களின் இளைய மகன் ஆவார்.

கபிலன் வைரமுத்துவின் தாயார் பொன்மணி வைரமுத்து தமிழ் பட்டதாரி. இவரது மனைவி ரம்யா மருத்துவர் ஆவார். இவர் பல்வேறு கவிதைகள், புத்தகங்களை வெளியிட்டுள்ளார். கபிலன் வைரமுத்துவின் சகோதரர் மதன் கார்க்கி சென்சார் நெட்ஒர்க் படிப்பில் பி.எஸ்.டி முடித்துள்ளார். இவரது சகோதரர் மதன் கார்க்கியும் பாடலாசிரியர் ஆவார்.

இவர் திரைக்கதை எழுதிய படங்கள்: கவண், விவேகம்

இவர் பாடல்கள் இடம் பெற்ற படங்கள்: உதயம் என்.எச் 4, பொறியாளன், ஜீவா, அனேகன், இந்திரஜித், பேய்கள் ஜாக்கிரதை, கவண், விவேகம்