
நடிகர் தனுஷ் சிறந்த படங்களை தேர்ந்துடுத்து நடிப்பதில் மிகவும் ஆர்வம் உள்ளவர் அது பிற மொழி படங்களாக இருந்தால் அதன் உரிமையை முறைப்படி பெற்று நடிப்பார் அப்படி அவர் தயாரித்த படங்களும் அதிகம் அந்த வரிசையில் தற்போது அந்ததாதன் படத்தை ரீமேக் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பதை அவரே தெரிவித்துள்ளார்.
2018-ல் வெளியாகிய அந்தாதன் திரைப்படம் தமிழில் நடிகர் தனுஷின் தயாரிப்பில் ரீமேக் ஆக உள்ளது. தனது இயல்பான நடிப்பால் மக்களை ஈர்த்த நடிகர் தனுஷ், அவருடைய ஹாலிவுட் பட ப்ரோமஷனில் அந்தாதன் படத்தை ரீமேக் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.

மும்பையில் நடந்த விழா ஒன்றில் நடிகர் தனுஷ், ” அந்தாதன் படத்தை பார்த்த பின், அந்த படத்தினை ரீமேக் செய்ய விரும்பினேன், மேலும் இந்த படத்தின் ரீமேக் உரிமையை பெற முயற்சிக்கிறேன், இருப்பினும் இன்னும் அவை முழுமை பெறவில்லை.” இவ்வாறு நடிகர் தனுஷ் கூறியுள்ளார்.
ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் கவுர், தபு மற்றும் ராதிகா ஆப்தே நடித்து வெளிவந்த இந்த படத்தின் ரீமேக் குறித்து சித்தாரத் கடந்த டிசம்பர் மாதம் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட. இந்த படத்தின் கதாநாயகனான ஆயுஷ்மான் கவுர் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பதிலளித்திருந்தார். அதன்பின் குறிப்பிடும் வகையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை.

இன்னிலையில் நடிகர் தனுஷின் நடிப்பில் வெளிவந்த ஹாலிவுட் படம் தமிழில் ஜூன் 21ல் வெளிவர உள்ளது. அடுத்தடுத்து இயக்குநர் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தில் தனுஷ், அதிதி ராவ் நடித்துள்ளனர், ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கையில். தனுஷ் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனது 3வது பாலிவுட் படத்தின் படப்பிடிப்பை தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
