
தெலுங்கானா சகுந்தலா தமிழ்நாட்டில் சொர்ணாக்கா என்று அறியப்படும் இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார்.
இந்தியாவின் மகாராட்டிரம் மாநிலத்தில் பிறந்த இவர் 1981 ஆம் ஆண்டில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 70 க்கும் மேற்பட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை, வில்லி பாத்திரங்களில் நடித்துள்ளார். 2003-இல் வெளியான ஒக்கடு என்ற தெலுங்குப் படம் இவருக்குப் புகழ் பெற்றுத் தந்தது.
ஐதராபாதில் கொம்பள்ளி பகுதியில் வசித்து வந்த இவர் 2014 ஜூன் 14 சனிக்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானார்.
இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்: தூள், சிவகாசி
