Wednesday, October 28
Shadow

‘அக்னி சிறகுகள்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்

நடிகர்கள் விஜய் ஆண்டனி – அருண்விஜய் ஆகியோர் இணைந்து ‘அக்னி சிறகுகள்’ என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை ‘மூடர் கூடம்’ நவீன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்ட நிலையில், இந்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு  ஐரோப்பாவில் நடைபெறவுள்ளது. ஐரோப்பாவில் 50 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்பில் ஆக்சன் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. மேலும் இந்த படத்தில் ஷாலினி பாண்டே, பிரகாஷ்ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.