Wednesday, October 28
Shadow

தமிழ் சினிமாவை புறக்கணிக்கும் கீர்த்தி சுரேஷ்

மலையாள சினிமாவில் அறிமுகமானாலும் தமிழ் சினிமாதான் கீர்த்தி சுரேஷை வளர்த்துவிட்டது.  கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலே மிக பெரிய மார்கெட் பிடித்தவர் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களோடு நடித்தவர். தெலுங்கில் ‘மகாநடி’ படத்தில் நடித்த பிறகு உடனடியாக வேறு எந்த தெலுங்குப் படங்களிலும் நடிக்க சம்மதிக்காமல் இருந்தார். ஆனால், இப்போது அடுத்தடுத்து மூன்று தெலுங்குப் படங்களில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். அதோடு, ஹிந்திப் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.

கீர்த்தி சுரேஷ் திடீரென தமிழ் சினிமாவைப் புறக்கணிக்கும் காரணம் என்னவென்று தெரியவில்லை. கோலிவுட்டில் விசாரித்த போது தமிழை விட தெலுங்கில் அவருக்கு அதிக சம்பளம் தருகிறார்களாம். இத்தனைக்கும் அவர் நடிக்க சம்மதித்திருக்கும் படங்களில் முன்னணி நடிகர்கள் ஜோடியாக நடிக்கவில்லை. அவர்கள் இரண்டாம் நிலை நடிகர்கள்தான்.

தமிழில் விஜய், விக்ரம், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடியாக நடிப்பேன் என்று சொன்னவர், தெலுங்கில் அதற்கு நேர்மாறாக நடிக்க சம்மதித்திருப்பதும் ஆச்சரியத்தை அளித்துள்ளதாம். இப்போதைக்கு கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமா பக்கம் வர மாட்டார் என்கிறார்கள்.