
நடிகர் அஜித், வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம், டில்லி கணேஷ், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கும் படம் ‛நேர் கொண்ட பார்வை’. போனிக் கபூர் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை இயக்கி இருப்பவர் ஹெச்.வினோத்.
அக்.8,ல் இப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. சென்னையில் மட்டும் அந்தப் படம், முதல் நாளில் மட்டும் 1.58 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கும் தகவல் வெளியாகி இருக்கிறது. 2019ல் வெளியான படங்களிலேயே வசூலில், முதல் நாளில் அதிக சாதனை படைத்திருக்கும் படம் நேர் கொண்ட பார்வை தான் என திரையுலகினர் கூறுகின்றனர்.
தமிழகம் முழுவதும் இரண்டு நாளில் இப்படம் ரூ.30 கோடி வசூலித்திருப்பதாக இப்படத்தை வெளியிட்ட தமிழக விநியோகஸ்தர் ராகுல் ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
வார விடுமுறை நாட்களில் இந்த தொகை இன்னும் அதிகரிக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது
