Wednesday, October 28
Shadow

ரஜினி புலிதான், விஜய் புளிதான் விஜய் மற்றும் அவர் அப்பா S.A.சந்திரசேகரை கலாய்த்த பிரபல அரசியவாதி

S.A.சந்திரசேகருக்கு, சசிகலாபுஷ்பா காரமான பதில்

புலி வருது கதை போலத்தான் ரஜினி அரசியலுக்கு வரும் கதையும்,என S.A.சந்திரசேகர் நக்கலடித்துள்ளார்.யாரிடமும் எதற்காகவும் கெஞ்சாதவர் ரஜினி.

தன் பட சிக்கல்களில் இருந்து காப்பாற்றி கொள்ள,கிளைக்கு கிளை தாவி வித்தை காட்டிய மந்தி விஜய் போலல்ல ரஜினி.

ரஜினி ஒரு புலி.
கலைஞர்,மற்றும் திமுக ஆதரவாளராக உங்கள் மகனை உருவகப்படுத்தி களமாடினீர்கள்.தோல்வி பல கண்டீர்கள்.

அங்கு
கலைஞரும்,ஸ்டாலினும் புறக்கணித்தே வந்தனர்,அதற்கிடையே வெட்கமேயின்றி கலைஞர் காலில் விழுந்து,மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஆர்ஜிதம் செய்த உங்கள் நிலத்திற்கு மாற்றாக வேறோர் நிலம் திரும்ப பெற்றார் விஜய்.காரியம் முடிந்ததும்,திமுகவில் பருப்பு வேகவில்லை என உணர்ந்து,அம்மா ஆதரவாளராக கூச்சமேயின்றி தடம் மாற்றினீர்கள்.அம்மாவின்2011 தேர்தல் வெற்றி தன்னால்தான் ஏற்பட்டது போன்ற தோற்றத்தை விஜய் உருவாக்குவதை உணர்ந்த முதல்வர் அம்மா உங்கள் மகனை ஒதுக்கி புறந்தள்ளினார்.

பின்னர் தலைவா படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது_ என்ன செய்தார் உங்கள் மகன் விஜய்?

கூசாமல் கொடநாடு சென்று, அம்மாவின் காலில் விழுந்து,பிரச்னையை தீர்த்து கொண்டார் உங்கள் சுயநல சொரூப மைந்தன் விஜய்

அடங்காத உங்கள் அரசியல் கனவு,அன்னா அசாரேவை தேடி ஓட வைத்தது உங்கள் மகனை.ஊழல் ஒழிப்பு கோஷத்துடன்,வந்த விஜய்யின் யோக்யதை அறிந்த அசாரே,சேர்த்து கொள்ளாமல் துரத்தி அடித்தார்

கொப்பளிக்கும் கனவுகளுடன் மீண்டுமொரு முயற்சியாக,ஈழத்தில் இரண்டரை லட்சம் தமிழர்களை கொன்று குவித்து குருதி கறை படிந்த ராகுல்காந்தியை தேடி ஓடினார் விஜய்.இனம்,மானம்,சூடு,சொரணை துளியுமின்றி ராஜ்யசபை உறுப்பினர் பிளஸ் இளைஞர் காங்கிரஸ் பதவி கேட்டு அணுகினார்.ஒரு புன்னகையுடன் மூக்குடைத்து அனுப்பினார் ராகுல்

குப்புற விழுந்ததால் ஒட்டிய மண்ணை துடைத்தெறிந்து விட்டு கோயமுத்தூர் சென்று காத்திருந்து பிரதமர் மோடியை சந்தித்து தோல்வியுடன் திரும்பினார் விஜய்
வெட்கமாயில்லையா உங்கள் இருவருக்கும்?

முதல்வர் எடப்பாடி அண்ணன் காலிலும் விழுந்தவர் விஜய்.தெறி,மெர்சல் படங்களுக்காக எடப்பாடி அண்ணன் கால்களில் விழுந்து காரியாம் சாதித்து கொண்ட சுயநலப்புலி உங்கள் புத்திரன்

மோடி தேடி வந்து சந்தித்தார் ரஜினியை.எந்த காலக்கட்டத்திலும் யாரிடமும் கைக்கட்டி நின்றதில்லை ரஜினி.

விஜய்யால் வாழ்க்கை தொலைத்து வீதிக்கு வந்தவருண்டு.ரஜினியால் ஒருவர் கூட நஷ்டப்பட்டதில்லை

படங்கள் நடித்து கொடுத்து,பல பேருக்கு வாழ்வளித்துள்ளார் ரஜினி. ஒருவரை கூட கைக்காட்டமுடியாது உங்கள் மகனால்.

நீங்களும் உங்கள் மகன் விஜய்யும்,பச்சோந்திகளின் கூடாரம்.பச்சோந்திகள் நிறம் மாறலாம்,குரல் கொடுக்க கூடாது.அதுவும் நிறம் மாறா,குணமும் மாறா புலியை பார்த்து குரல் வரக்கூடாது

போர் வரட்டும்,காத்திருக்கிறேன் என்றுதான் கூறியுள்ளார் ரஜினி.

தேர்தல் வரும் பொழுது வருவார்_
பசிக்கும் பொழுதுதான் புலி வேட்டையாடும்.

இப்போது பசியில்லை,வேட்டையும் இல்லை

ஆட தெரியாதவள்,வீதி கோணல் என்பாளாம்.புலி வரும் பொழுது வரட்டும்,உங்களுக்கு ஆசை மேலோங்கினால்,பிறர் மீது பச்சகுதிரை ஏறாமல் உங்கள் மகனை நேரடி அரசியலில் இப்போதே இறக்கி விடுங்களேன் டைரக்டர் சார்.

கூழுக்கும் ஆசைப்படுதல்,மீசைக்கும் ஆசைப்படுதல். காரியம் நடக்காது.

ரஜினி புலி,விஜய் புளி

புலி வாலை பிடிக்காதீர்…