Sunday, November 8
Shadow

பட்ஜெட்டை தாண்டிய பிகில் வசூலில் சாதிக்குமா

தமிழர்களால் மிகவும்  எதிர்பார்க்கும் படம் தளபதி நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் திரைப்படம் இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடம் மிக பெரிய சாதனை புரிந்துவருகிறது இந்த படம் வரும் மாதம் 24ம் தேதி அதாவது தீபாவளிக்கு மூன்று தினங்களுக்கு முன்னே வெளியாகும் என்றும் எதிர்பார்க்கபடுகிறது இந்த சூழ்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் பற்றி சில செய்திகள் கசிந்துள்ளது

‘பிகில்’ டிரைலர் நேற்று வெளியாகி ஒன்றரை நாளில் இரண்டு கோடிக்கு மேல் பார்க்கப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் கொஞ்சம் சுணக்கம் இருந்தாலும் நேற்றிலிருந்து டிரைலர் மீதான பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மகிழ்ச்சியடைந்திருக்கும் படத்தின் தயாரிப்பில் அங்கம் வகிக்கும் தயாரிப்பாளரின் மகளான அர்ச்சனா கல்பாத்தி ஒரு தனியார் நிறுவன சேனலுக்கு பேட்டியளித்திருக்கிறார்.

அதில் “படத்தில் பெண்களின் ஆற்றல் பற்றிப்பேசுகிறோம். அதற்கு கால்பந்து விளையாட்டு ஒரு களமாக இருக்கிறது. அது மட்டும்தானா என்றால் இல்லை… வேறு சுவாரஸ்யங்களும் இருக்கின்றன. அதைப் படத்தில் பார்த்து ரசித்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் வெளியே சொல்லவில்லை. நாங்கள் பல தொழில்களை மேற்கொண்டிருக்கிறோம். அதில் சினிமாவும் ஒன்று. அதனால் படத்தில் அரசியல் பேசவில்லை…” என்றார்.

விஜய் பற்றிக் குறிப்பிடும்போது “அவர் இதில் எத்தனை வேடங்கள் ஏற்றிருக்கிறார் என்பதைப் படத்தில் பார்த்தே தெரிந்து கொள்ளுங்கள். கால்பந்து விளையாட்டுக்காக அவர் பயிற்சி பெற்று காட்சிகளில் நடித்தது ஆச்சரியமாக இருந்தது. பெரிய நடிகரான அவர் இதெல்லாம் தேவையில்லை என்று ஒதுக்காமல் இப்படி பயிற்சி எடுத்துக்கொண்டு நடித்ததைப் பாராட்டாமல் இருக்க முடியாது..!” என்றார்.

அட்லீ பற்றிய கேள்விக்கு, “படத்தின் கதையை அவர் சொன்னபோதே இதன் பிரமாண்டம் பற்றி என் அப்பா கல்பாத்தி அகோரம் புரிந்து கொண்டார். அப்போதே இது குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் அடங்காது என்று முடிவு செய்து விட்டோம். அதனால், எதிர்பார்த்த பட்ஜெட்டுக்கு மேல் போனபோது அதன் நியாயம் கருதி அதற்கு நாங்கள் உடன்பட்டோம்..!” என்றார்.