
அஜித்தின் 6௦வது படமான வலிமை படத்தின் துவக்கவிழா சமீபத்தில் நடைபெற்றது. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய ஹெச்.வினோத் தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். இந்தப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா ஐந்தாவது முறையாக அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்தநிலையில் நடிககை நஸ்ரியாவும் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என ஒரு தகவல் கசிந்துள்ளது.
தமிழில் நேரம், ராஜாராணி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நஸ்ரியா, தனுஷின் ‘நையாண்டி’ படத்துடன் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்டு கேரளாவில் செட்டிலானார்.. சில வருட இடைவெளிக்கு பிறகு கடந்த வருடம் ‘கூடே’ என்கிற மலையாள படத்தில் பிருத்விராஜின் தங்கையாக நடித்தார்..
இதற்கு முன்பு அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திலேயே முக்கியமான கேரக்டரில் அவரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது.
