
தமிழ் சினிமாவின் மிக பெரிய தயாரிப்பு நிறுவனம் என்றால் உடனே நம் மனதுக்கு நியாபகம் வருபது ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் மிகவும் பழமையான நிறுவனமும் கிட்டத்தட்ட இந்த தயாரிப்பு நிறுவனம் பல முக்கிய படங்களை தயாரித்து இருப்பது குறிப்பிடவேண்டிய விஷயம் வரலாற்று மிக்க அதாவது தமிழ் சினிமாவின் வரலாறு சொல்லும் படங்கள் நடிகர்களை அறிமுகம் செய்த ஒரு நிறுவனம் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தயாரிக்கும் படம் “அந்த நாள்”

ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வழங்கும் கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் அறிமுக நாயகன் ஆர்யன் ஷாம் நடிக்கும் “அந்த நாள்” படத்தின் FIRST LOOK போஸ்டரை சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்கள் வெளியிட்டார். கதாநாயகன் ஆர்யன் ஷாம் புகழ்பெறவும், “அந்த நாள்” படம் வெற்றி பெறவும் வாழ்த்துக் கூறினார். அந்த நிகழ்ச்சியில் ஏவிஎம். சரவணன், இயக்குநர் SP.முத்துராமன், கதாநாயகன் ஆர்யன் ஷாம், திருமதி.அபர்ணா குகன் ஷாம், படத்தின் இயக்குநர் விவீ, ஒளிப்பதிவாளர் சதீஷ் கதிர்வேல் ஆகியோர் கலந்து கொண்டனர். கிரீன் மேஜிக் என்டர்டெய்ன்மென்ட் சார்பில் R. ரகுநந்தன் தயாரிக்கிறார்.
