Saturday, November 7
Shadow

விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற டி .ராஜேந்தருக்கு இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து

சினிமா நாம் மக்களோடு பேசும் மொழி. அதை ஒவ்வொரு பகுதியாக நுழைந்து மக்களிடம் கொண்டுசெல்லும் விநியோகஸ்தர்கள் உழைப்பின் தேனீக்கள்.

சமீபத்தில் அந்த உழைப்பாளர்களின் சங்கத் தேர்தல் நடைபெற்றது.

சென்னை செங்கல்பட்டு விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் ஜனநாயக முறையோடு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
மொழியறிவு செறிந்த நண்பர் டி. ராஜேந்தர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தயாரிப்பாளராகவும், படைப்பாளியாகவும் இருந்து அனுபவம் பெற்றவர். சுய நல நோக்கமற்றவர்.

தயாரிப்பாளர்கள் படைப்பாளிகளின் நன்மை உணர்ந்து பலமான ஒரு இணைப்புப் பாலமாக செயல்படுவார் நம் டி ஆர் என்ற நம்பிக்கை உள்ளது.

நல்ல மாற்றங்கள் நிகழவும், சினிமாவின் வளர்ச்சிக்கு பயனுள்ள திட்டங்களை வகுக்கவும்
வெற்றி பெற்ற அனைவரும் இணைந்து பணியாற்றுங்கள்.

டி ஆர் அவர்களுடன் வெற்றிபெற்ற அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் என் வாழ்த்துகள்.