

யோகிபாபு நடிப்பில் வெளியான கலகலப்பான காமெடி திரைப்படம் “பட்டிபுலம்”. இந்த படத்தை தயாரித்த சந்திரா மீடியா விஷன் நெடுஞ்சாலை, மாயா வெற்றிப்படங்களின் நாயகன் ஆரி அருஜீனா நடிப்பில் தனது அடுத்த படத்தை தயாரிக்கிறது.
இந்தப்படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ், ஆக்ஷன், த்ரில்லர் நிறைந்த படமாக உருவாகிறது. ஜீவா சங்கரின் அமரகாவியம், எமன் படங்களில் இணை இயக்குனராக பணிபுரிந்த ஆல்பர்ட் ராஜா இந்த படத்தை இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மலேசியா, சென்னை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது. நாசர், செந்தில், யோகிபாபு என்று பெரும் நட்சத்திர கூட்டமே நடிக்கும் இந்த படத்தில் மற்ற கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஒளிப்பதிவு: எல்.கே.விஜய்
கலை இயக்குனர்: வீரசமர்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்: ஆல்பர்ட் ராஜா
தயாரிப்பு: எஸ்.எஸ்.திருமுருகன்
