Saturday, November 7
Shadow

ஏ ஆர் ரஹ்மானுக்கு கேக் ஊட்டிய கோப்ரா டீம்

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் ‘கோப்ரா’

லலித் குமார் தயாரித்து வரும் இந்தப் இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் முக்கியக் காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க முடிவு செய்துள்ளது படக்குழு.

இந்தப் படத்தில் 10-க்கும் அதிகமான கெட்டப்களில் விக்ரம் நடிக்கவுள்ளாராம்.

படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ள நிலையில் நேத்திக்கு பர்த் டே கொண்டாட்டிய தன் கோப்ரா மியூசிக் டைரக்டர் ரஹ்மானை ஒரு கேக் சகிதம் சந்தித்து அதை வெட்டி , ஊட்டி மகிழ்ச்சியையும், பாராட்டையும் தெரிவிச்சிட்டு வந்திருக்காங்க கோப்ரா டீம்