

இறுதிச்சுற்று படமெடுத்து அதுவும் ஹிட் ஆன பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியிருக்கும் திரைப்படம் சூரரைப் போற்று. சூர்யாவின் நடிப்பில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டீசர் நேத்திக்கு (ஜனவரி 7) வெளியானது.
அந்த டீசருக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. சமுக வலைதளங்கலிள் ட்ரன்டிங் ஆகிகொண்டு இருக்கிறது சூர்யாவின் நடிப்பும் பெரிதும் பாராட்டப்பட்டுள்ளது. வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகம் பேரால் இந்த டீசர் பார்க்கப்பட்டுள்ளது. இப்போது வரை சுமார் 5 மில்லியன் பார்வையாளர்களை பெற்று. தொடர்ந்து இந்த டீசரானது யூ டியூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. சூரரைப் போற்று பின்னணி இசைக்கும் ஜி.வி.பிரகாஷ் குமாரை பலரும் வெகுவாக பாராட்டி வாரய்ங்க.
ஏர் டெக்கானின் நிறுவனர் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை கதையே சூரரைப் போற்று திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படத்தினை 2D எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் சிக்யா எண்டெர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிச்சிருக்குது
