Sunday, November 8
Shadow

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

 

பஆர்.ஜே. பாலாஜி நடித்து வெளியான ‘எல்.கே.ஜி’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் கதை, திரைக்கதையைத் தனது நண்பர்களுடன் அமர்ந்து உருவாக்கியிருந்தார் ஆர்.ஜே. பாலாஜி. இந்தப் படத்தைத் தயாரித்த வேல்ஸ் நிறுவனம், ஆர்.ஜே.பாலாஜி-யை கமிட் செய்து அடுத்த படத்தையும் தயாரிக்க முன்வந்தது.

இதை அடுத்து தன் நண்பர்களுடன் அமர்ந்து கதை மற்றும் திரைக்கதையை எழுதி முடித்தார் ஆர்.ஜே.பாலாஜி. அந்தப் படத்தில் அவரே நாயகனாக நடித்து இயக்கவும் முடிவு செய்தார். மூக்குத்தி அம்மன் படத்தின் கதை. பக்தித் திரைப்படமாக இருந்தாலும், பக்தியின் பெயரால் நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்சினைகளைப் பற்றியும் படம் பேசுகிறது. நேரடியாக கடவுள்களைக் கிண்டலடிக்கவில்லை என்றாலும் கடவுளின் பெயரால், தன்னையே முன்னிருத்தும் பலருக்கும் இந்தப்படம் அதிருப்தியைக் கொடுக்கும் என்றும் மூக்குத்தி அம்மன் படத்தின் கதை. பக்தித் திரைப்படமாக இருந்தாலும், பக்தியின் பெயரால் நாட்டில் நடக்கும் அத்தனை பிரச்சினைகளைப் பற்றியும் படம் பேசுகிறது. நேரடியாக கடவுள்களைக் கிண்டலடிக்கவில்லை என்றாலும் கடவுளின் பெயரால், தன்னையே முன்னிருத்தும் பலருக்கும் இந்தப்படம் அதிருப்தியைக் கொடுக்கும் – அப்படீன்னெல்லாம் சொல்லி இருந்தாங்க

சர்ச்சையைக் கிளப்பப் போகும் இந்தக் கதையைக் கேட்ட நயன்தாரா, அதில் மூக்குத்தி அம்மனாக நடிக்கச் சம்மதம் தெரிவிச்சு ஜஸ்ட் லைக் நடிக்காம விரதமெல்லாம் இருந்ததா சேதி வந்துச்சு.. இது பத்தி வேல்ஸ் குரூப் டீமில் விசாரிச்சா “லேடி சூப்பர் ஸ்டாருன்னு பேரெடுத்த நயன்தாரா ஆரம்பத்தில் ரொம்ப கேஷூவலாத்தான் வந்து நடிச்சிக்கிட்டு இருந்தார். இந்தப்படத்தின் கதையை காமெடி கலந்தது என்பதால் ரிலாக்ஸா இருந்தவர், ஷூட்டிங் ஸ்பாட்டில் நடைபெற்ற ஒரு சம்பவத்துக்குப் பிறகு மிகவும் ஸ்டிரிக்டாக மாறிவிட்டார் நயன்தாரா” அப்ப்ட்டீன்னு சொல்லிட்டு இண்டர்வெல் விட்டு கொஞ்சம் பில்ட் அப் டைம் கொடுத்து கண்டியூனியு பண்ணி சொன்ன சேதியிது:

“நயன்தாராவும் மற்ற எல்லா நடிகைகளைப் போலவும் ஷூட்டிங் ஸ்பாட்டின் எல்லா இடங்களிலுமே செருப்பு போட்டுகிட்டே தான் செல்வார். அவர் மறந்துட்டாலும், செருப்பு அணிந்துகொள்ளும்படி மற்றவர்கள் நியாபகப்படுத்துவார்கள். இதற்குக் காரணம், பலவிதமான பொருட்களை அங்குமிங்கும் எடுத்துச் செல்லும் ஸ்பாட்டில் எப்போது வேண்டுமானாலும் அவரது பாதங்களில் ஆணிஅல்லது ஏதாவது உடைந்த பொருட்களோ ஏறிடலாம். இந்த திரைப்படத்தில் அதிகம் செலவு செய்யப்பட்டது நயன்தாராவின் சம்பளம் தான். ஒரு நாள் கால்ஷீட் போனாலும் மிகப்பெரிய பண விரயம் ஏற்படும் என்பதால் இந்த கவனிப்பு எப்போதும் இருக்கும்.

அது மாதிரி அன்றொருநாள் எப்போதும் போல செருப்பு அணிந்துகொண்டே ஸ்பாட்டுக்குள் வந்தார் நயன்தாரா. அப்போ ஷூட்டிங் நடைபெற்றது ஒரு கோயிலுக்குள். வயக்கம் போய செருப்பு போட்ட கொண்டே கோவிலுக்குள் செல்லும் நயன்தாராவைப் பார்த்த அந்தப்பகுதி மக்கள், ‘ஏன்மா நீ மட்டும் செருப்பு போட்டுக்கிட்டு கோவிலுக்குள்ள போறியே.. அம்மான் வேசம் போட்டா என்னா வேணுமுன்னாலும் செய்வியா என்று குரல் கொடுத்தனர்.

இப்படி உரத்த குரல் வந்த திசை நோக்கித் திரும்பிப் பார்த்துக்கொண்டே நடந்த நயன்தாரா, திடீரென கால் தடுக்கி கீழே விழுந்திருக்கிறார். ஸ்பாட்டில் இருந்தவர்கள் உடனே வந்து அவருக்கு உதவினாலும் மனம் கேட்காத நயன்தாரா ஒரு நாள் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு தங்கியிருந்த ஹோட்டல் ரூமு-க்கு போயிட்டார். அவரை சமாதானப்படுத்த படக்குழுவினர் எவ்வளவோ முயன்றாலும், என்ன இருந்தாலும் நான் அப்படி செய்திருக்கக்கூடாது என்று வருத்தப்பட்ட நயன்தாரா அதன்பிறகு ஸ்பாட்டுக்குள் வரும்போதும், அம்மன் வேடத்துக்கு மாறும்போதும் செருப்பு அணிவதையே தவிர்த்துட்டார் -ன்னு சொல்லி நயன் தாரா-வை நினைத்து கன்னத்தில் போட்டுக் கொண்டாய்ங்க .

அப்ப்படியாபட்ட இந்த மூ.அ படத்தை ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பைக் கவனிச்சி வந்தார். ஆர்.ஜே. பாலாஜி – என்.ஜே.சரவணன் இருவருமே ‘எல்.கே.ஜி’ படத்தில் முதல்நிலை உதவி இயக்குநர்களாக பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போ 90 நாள் ஆன நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் முடிஞ்சதா ஆர் ஜே பாலாஜி அறிவிச்சு குரூப் போட்டோ-வை நமக்கு அனுப்பி இருக்கார்.

புது இயக்குநரா இருந்தாலும் திட்டமிட்டப்படி ஷூட்-டை 90 நாளில் முடிச்ச மூ. அம்மனை வாழ்த்தி கோலிவுட் பிரபலங்கள் பிளையிங் பொக்கே அனுப்பிக் கிட்டு இருக்காய்ங்க