
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் ஆணிவேர் என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்து நிற்கிறார் என்று சொன்னல் மிகையாகது .இவரின் நடிப்பால் இந்திய சினிமாவையே தன் வசபடுத்தி வைத்துள்ளர். தமிழ் மட்டும இல்லாமல் தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி போன்ற மொழி ரசிகர்களும் இவரின் ரசிகர்கள் ஏன் இயக்குனர்களும் இவரின் ரசிகர்களும் இவர் சிறந்த நடிகர் மட்டும் இல்லை மிக சிறந்த மனிதாபிமானம் கொண்டவர். இவரை போலவே இவர் ரசிகர்களும் இவரின் பிறந்த நாளுக்கு மக்கள்க்கு உபயோகமாக மருத்துவ முகாம் நடத்திவருகிரார்கள்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சாலிகிராமத்தில் சென்னை விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது அதில் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் குழந்தையின்மை அக்குபஞ்சர் ஆகிய பரிசோதனைகளும் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.

மேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து இன்று கண் பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்ய இருக்கிறது அதன் முதல் கட்டமாக ஒருவருக்கு , இன்றைய தினமே கண் சிகிச்சை இலவசமாக அளிக்க இருக்கிறது
.
