Sunday, November 8
Shadow

தனுஷ் பட்டாஸ் வெடிக்க இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது!

இன்னிக்கு 100வது நாள் விழாவில் இருக்கும் அசுரன் நாயகன் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘பட்டாஸ்.’ இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சினேகா, மெஹ்ரின் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள். துரை செந்தில்குமார் டைரக்டு செய்துள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து இருக்கிறது. படம், பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது. படத்தை பற்றி தயாரிப்பாளர் ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் மிகச் சில நிருபர்களுக்கு (மட்டும்) பேட்டி அளிச்சப் போது சொன்னது இது :

“இந்த பட்டாஸ் படம், 1000 வருஷங்களுக்கு முன் இருந்த அடி முறை கலையை கருவாக கொண்டது. இது, அந்த காலத்தில் நம்ம தமிழர்களோட தற்காப்பு கலையாக இருந்தது. இப்போதும் தென் மாவட்டங்களில் பழக்கத்தில் இருக்கிறது. கதைப்படி, ‘பட்டாஸ்’ கதையின் நாயகன் தனுஷ், அடி முறை கலைகளில் தேர்ந்தவராக இருக்கிறார். இதற்காக தனுஷ் 6 மாதங்கள் பயிற்சி பெற்றார். படத்தில் அவருக்கு மனைவியாக வரும் சினேகாவும் இந்த கலையை கற்றுக் கொண்டார்.

தனுஷ் அப்பாவாகவும், மகனாகவும் 2 வேடங்களில் நடித்து இருக்கிறார். படம், பொங்கல் விருந்தாக 1,500 தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. எங்கள் பட நிறுவனம் எப்போதுமே குடும்பப்பாங்கான படங்களையே தயாரித்து வருகிறது. ஆபாச காட்சிகளோ, இரட்டை அர்த்த வசனமோ இருக்காது. ‘பட்டாஸ்’ படமும் அப்படியே அமைந்து இருக்கிறது.

அனைத்து தரப்பினரும் பார்க்கும் வகையில், தணிக்கை குழுவினர், ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.” அப்படீன்னு சொல்லி இருந்தார்

பட்டாஸ் டைரக்டர் துரை செந்தில்குமார்-க்கு போன் போட்டு இது பத்தி கேட்ட போது “நான் வெற்றி மாறன் சாரிடம் உதவி இயக்குநராக இருந்தபோது தனுஷ் சாருக்காக கிக்பாக்ஸிங் கதை ஒன்றை எழுதிக்கொண்டிருந்தேன். ஆனால், கிக்பாக்ஸிங் வெளிநாட்டிலிருந்து வந்த சண்டைக்கலை எனப் புரிந்தது. அதனால் அந்தக் கதையை அப்படியே விட்டுவிட்டு, தமிழர்களின் வீரக்கலை குறித்துத் தேட ஆரம்பித்தேன். அப்படி உருவானதுதான் இந்தப் படம்’’ – ‘

இத்தனைக்கும் `வெற்றி மாறன் சாருடன் இருந்த காலத்திலிருந்தே தனுஷ் சாரைக் கூர்ந்து கவனிக்கிறேன். முதல்நாள் ஷூட்டிங்கில் மறுநாள் எடுக்கவேண்டிய கதைக்கான காட்சியை மட்டும் இயக்குநர் சொல்வார், மறுநாள் படப்பிடிப்பில் யாருமே எதிர்பார்க்காத பர்ஃபாமன்ஸ் காட்டி அசத்துவது தனுஷ் சாரின் ஸ்பெஷாலிட்டி. தமிழர் தற்காப்புக்கலையின் ஜாம்பவான் நாகர்கோவில் மாஸ்டர் செல்வராஜ். அவரிடம்தான் தற்காப்புக் கலைக்கான பயிற்சி எடுத்துக்கொண்டார் தனுஷ். அவரிடம் கற்றுக்கொண்ட கலையோடு தன்னுடைய பங்களிப்பையும் கலந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் நடித்து பிரமிக்க வைத்துவிட்டார் தனுஷ் சார்.’’

இதுக்கிடையிலே இந்த படத்துக்கு ஏனிந்த தலிப்பு கேக்கறாங்க.. “சினிமாவை தியேட்டரில் வந்து பார்ப்பது இளைஞர் கூட்டமே. அவர்களைக் கவர்வதற்காகத்தான் ‘பட்டாஸ்’ தலைப்பு.’’ அப்படீன்னார்