

பதினோரு ஆண்டுகளுக்கு முன்னால் சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணியில் வெளிவந்த படம் “நாடோடிகள்’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு பரவலான வரவேற்புகள் கிடைச்சுது. ம்.. அப்புறமென்ன.. நாடோடிகள் 2 படத்துக்கு பூஜை போட்டு . இதன் படப்பிடிப்பு 2018 மார்ச் மாதம் தொடங்கியது.

முதல் பாகத்தில் இருந்த சமுத்திரக்கனி – சசிகுமார் கூட்டணி இந்தப் படத்திலும் இணைந்துள்ளது. சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தின் நாயகிகளாக அஞ்சலி மற்றும் அதுல்யா ரவி நடித்துள்ளார்கள். இசையமைப்பாளர் – ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவாளர் – ஏகாம்பரம், கலை இயக்குநர் – ஜாக்கி, படத்தொகுப்பு – ஏ.எல்.ரமேஷ். இயக்கம் – சமுத்திரக்கனி. நாடோடிகள் 2 படப்பிடிப்பு 2018-லேயே நிறைவுபெற்றது. இப்படம் 2 வருடங்கள் ஆகியும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. ஒவ்வொரு முறையும் அறிவிப்பு தேதி அறிவிக்கப்படும். பின் தள்ளிப்போகும். இதனையடுத்து, இந்த முறை படத்தை வெளியிட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.
லேட்டஸ்டா நெக்ஸ்ட் வீக்,( ஜனவரி 31) அன்று வெளியாகுமுன்னு சொல்லி புதுசா ஒரு ட்ரெய்லரை ரிலீஸ் பண்ணி இருக்காய்ங்க
